சுவைமொட்டுகளை செயலிழக்க வைக்கும் பற்பசை!
சுவை மாறுவது ஏன்?
காலையில் எட்டாவது அதிசயமாக நேரமே
கண்விழித்து எழும்போது தூக்கத்தை அடித்து விரட்டுவது பல்தேய்க்கும் டாஸ்க்தான். ஆனால்
பல்தேய்த்தபின் சாப்பிடும் பொருட்களின் சுவையை சரியாக உணரமுடியாதது ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?
பற்பசைகளில் நுரைக்காக சேர்க்கும்
வேதிப்பொருளான சோடியம் லாரெத் சல்பேட்தான்(SLS or SLES) இதற்கு காரணம். பற்பசை வாயில்
எளிதில் பரவுவதற்காக இந்த வேதிப்பொருளை ஆராய்ச்சியாளர்கள் சேர்க்கின்றனர். சோப்பு,
பெயிண்டுகள், பூச்சிக்கொல்லிகளில் பயன்படும் முக்கியமான வேதிப்பொருள் இது. இவை நாக்கிலுள்ள
சுவை மொட்டுக்களை சிறிது நேரத்திற்கு செயலிழக்கச் செய்வதால், நீர் தவிர குளிர்பானங்களை,
இனிப்புகளை சாப்பிடும்போது அதன் உண்மையான சுவை நமக்கு தெரிவதில்லை.
எஸ்எல்எஸ் விளைவாகவே
நாம் சாப்பிடும்போது இனிப்பு சுவை குறைந்து கசப்புச்சுவை கூடுதலாகிறது. சோடியம் லாரெத்
சல்பேட் இல்லாத பேஸ்ட்டுகளும் தற்போது மார்க்கெட்டில் உள்ளதால் அதனை பயன்படுத்தினால்
இதற்கு தீர்வு கிடைக்கும்.