தீவிரவாதக்குழுக்களில் இணையும் காஷ்மீர் இளைஞர்கள்!



Image result for terror outfit kashmir



தீவிரவாத குழுக்களில் இளைஞர்கள்!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதக்குழுக்களில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இவ்வாண்டில் மட்டும் 130 இளைஞர்கள்(88-2016) டெரர் குழுக்களில் அட்மிஷன் போட்டுவிட்டனர்.

காஷ்மீரின் தெற்கு பகுதியிலுள்ள சோபியன் மாவட்டத்தில் மட்டும் 35 இளைஞர்கள் பல்வேறு தீவிரவாதக்குழுக்களில் இணைந்துள்ளனர். பெரும்பாலும் இந்த அமைப்புகளின் பாஸ், உலகளாவிய தீவிரவாத அமைப்பான அல்கொய்தா.  ஸாகிர் மூசா தலைமை வகிக்கும் அல்கொய்தா நேச அமைப்பான அன்சார் கவாத் ஹிந்த் எனும் அமைப்பு இளைஞர்களை அதிவேகமாக உள்ளிழுத்து ஜிகாதிகளாக்கி வருகிறது. 

முன்னாள் கேரம் சாம்பியனும், பொறியியல் பட்டதாரியுமான மூசா, ‘ஷரியத் யா ஷகாதத்’ எனும் கோஷத்தை முன்வைத்து ஹூரியத் தலைவர்களை மிரட்டி இளைஞர்களை மூளைச்சலவை செய்து வருகிறார். ஷோபியன், புல்வாமா, அனந்த்நாக், குல்காம், அவந்திபோரா ஆகிய மாவட்டங்களிலிருந்து பெருமளவு இளைஞர்கள் டெரர்குழுக்களில் ஐக்கியமாகியுள்ளனர்.
2


40 லட்ச ரூபாய் பாக்கெட் வாட்ச்!

டைட்டானிக் கப்பல் மூழ்கி 106 ஆண்டுகளுக்கு பிறகு அதிலிருந்து கைப்பற்றப்பட்ட பாக்கெட் வாட்ச் நாற்பது லட்சத்துக்கு ஏலமாகி பிரமிக்க வைத்துள்ளது.
மூழ்கவே மூழ்காது என அட்வான்சாக தயாரிக்கப்பட்ட டைட்டானிக் பனிப்பாறையில் மோதி உடைய, ரஷ்யாவைச் சேர்ந்த சினாய் கன்டார், தன் மனைவியை லைஃப்போட்டில் காப்பாற்றிவிட்டு அட்லாண்டில் கடலில் தத்தளித்து உறைந்து உயிரிழந்திருக்கிறார். பின்னர் அவர் உடல் மீட்கப்பட்டு நியூயார்க்கில் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் வாட்ச்தான் அண்மையில் டெக்சாஸின் டல்லாஸ் நகரில் ஏலமிடப்பட்டது. 1500 மக்களை பறிகொடுத்த சோக வரலாற்று நிகழ்வை பாக்கெட் வாட்ச் மக்களுக்கு ஏற்படுத்தினாலும் வாட்ச் 40 லட்சத்து 27 ஆயிரத்து 12 ரூபாய்களை கன்டாரின் குடும்பத்திற்கு சம்பாதித்து தந்துள்ளது.

3

இனப்படுகொலைக்கு தண்டனை!


மியான்மரில் வாழும் சிறுபான்மையினரான ரோஹிங்கயா மக்கள் மீது நடந்த வன்முறை, வல்லுறவு, தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக ராணுவத்தலைவர்கள் மீது குற்றம்சாட்டி ஐ.நா சபை அறிக்கை வெளியாகியுள்ளது.

“மியான்மர் ராணுவமான தட்மாடாவ், ரோஹிங்கயாக்களை திட்டமிட்டு கிராமங்களுக்கு நெருப்பிட்டு அழித்து, குழந்தைகளை தாக்கி, பெண்களை வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளதை நியாயப்படுத்தவே முடியாது” என்கிறது ஐ.நா அறிக்கை. இதன் விளைவாக உலகநீதிமன்றத்தில் மியான்மரின் ராணுவத்தலைவர்கள் இதற்கான விசாரணையை விரைவில் எதிர்கொள்ளவிருக்கின்றனர்.

 மியான்மர் ராணுவம், 7 லட்சம் ரோஹிங்கயாக்களை அகதிகளாக்கி விரட்டிய கொடூரம் நிகழ்ந்துள்ளது வெட்டவெளிச்சமானாலும், ரோஹிங்கயா ஆயுதக்குழுக்களை மட்டுமே பாதுகாப்பு படை தாக்கியது என கூறுகிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட விவரங்கள் பதினெட்டு பக்க அறிக்கையில் ஐ.நா சபை வெளியிட்டவுடன் ஃபேஸ்புக் நிறுவனம் குற்றம்சாட்டப்பட்ட மியான்மர் ராணுவத்தலைவர் மின் ஆங் லெயிங்கின் கணக்கை உடனே நீக்கிவிட்டது.