2018 உணவு டிரெண்ட்: வீகன்







வீகன் உலகிற்கு வெல்கம்! –


Image result for vegan

பால் பொருட்களை விலக்கி பதப்படுத்தப்பட்ட பொருட்கள் தவிர்த்து பழங்கள், காய்கறிகள், பருப்புகள், கொட்டைகளை உண்பதே வீகன் டயட்.
வெப்பமயமாதல் சூழலில் இறைச்சி, காய்கறிகளை விளைவிக்க செலவாகும் இயற்கை வளங்களை கூட்டிக்கழித்து பார்த்து குறைவான மாசுபாட்டை கொண்ட சரியான உணவுமுறை என வீகன்தான் என வீகன் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

கனடாவைச் சேர்ந்த தடகள வீரர் பிராண்டர் பிரேஸியர், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்காட் ஜூரெக் ஆகிய புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் வீகன் டயட்டை பின்பற்றுபவர்களே. கொழுப்பு உணவுகளை ஆதாரமாக கொண்ட பேலியோ டயட்டைப்போலவே வீகன் டயட்டை தொடக்கத்தில் தயக்கத்துடன் பின்பற்றிய இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்து 65 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இறைச்சி, முட்டை, கோதுமை, தேன், பால் பொருட்கள் ஆகியவை வீகன் டயட்டில் தவிர்க்கப்படவேண்டியது அவசியம்.  

வீகன் டயட்டில் பொதுவாக பின்பற்றப்படும் ஏழு முறைகள் உள்ளன. பழங்கள், காய்கறிகள், பருப்புகள்,கொட்டைகள் கொண்டது முதல்வகை. மேற்சொன்ன பொருட்களை 48 டிகிரி செல்சியஸ வெப்பத்தில் சமைத்து உண்பது இரண்டாவது வகை. கொழுப்புள்ள பருப்புவகைகளை குறைத்து காய்கறிகளை பெருமளவு உண்ணும் 80/10/10 டயட் மூன்றாவது வகை. பருப்பு, காய்கறிகளை குறைத்து அரிசி, உருளைக்கிழங்கு, சோளம் ஆகியவற்றை உண்ணும் மாவுச்சத்து உணவுமுறை(80/10/10-2) நான்காவது வகை. குறைந்தளவிலான காய்கறிகளை குறைவான வெப்பத்தில் சமைத்து சாப்பிடுவது ஐந்தாம் வகை. மாலை 4 மணி வரை பழங்களை உணவாக எடுத்துக்கொண்டு இரவுணவை சமைத்து உண்பது ஆறாவது வகை. வீகன் இறைச்சி, சீஸ் பொருட்களை மட்டுமே உண்பது ஏழாவது வகை.

வீகன் டயட்டை பெரும்பாலோர் தேர்ந்தெடுக்க முக்கியக்காணம் உலகை காப்பாற்ற வேண்டுமென்பதற்காக அல்ல; உடல் எடையை குறைப்பதற்காகத்தான். நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் வீகன் டயட் சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்காவின் நீரிழிவுமருத்துவ சங்கம்(ADA), அமெரிக்க இதயசங்கம்(AHA), கொழுப்பு விழிப்புணர்வு திட்டம்(NCEP) ஆகிய அமைப்புகளின் டயட் ஆய்வறிக்கைகள் தகவல் கூறுகின்றன. முறையாக கடைப்பிடித்தால் புற்றுநோய் அபாயத்தை குறைப்பதிலும், கிட்னி பாதிப்பு, ஆர்த்தரைட்டிஸ், அல்ஸீமர் ஆகியவற்றை தடுப்பதில் சிறப்பாக செயல்படுவதில் வீகனுக்கு நிகர் வேறில்லை.

 “ரொட்டி-–சப்ஜி, பருப்பு சாதம் வீகனில் வருமா என கேள்வி கேட்கின்றனர். இந்திய உணவுகளில் 80% வீகன்தான்” என்கிறார் மும்பையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் வினிதா. அதிக விலை, சிரமமான வழிமுறை என கிளம்பிய கமெண்ட்டுகளை புறம்தள்ளி பெருமளவு மக்களிடம் பரவலாகி வருகிறது வீகன். டயட்டோடு நிற்காமல் வீகன் ஷூக்கள், அழகு சாதனப்பொருட்கள், வீகன் உணவுப்பொருட்களுக்கான அங்காடி என விரியும் பலகோடி ரூபாய் வீகன் சந்தை பிரமாண்டம் வியக்கவைக்கிறது.

ஊட்டச்சத்து நிபுணரிடம் உங்கள் வேலைமுறைக்கேற்ற வீகன் டயட்டை பரிந்துரைக்க கோரி பின்பற்றுவது ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க உதவும்.

ஆக்கம்: ச.அன்பரசு
தொகுப்பு: தாமஸ் விஜேக்ஸ்