உரங்களுக்கு தடை சாத்தியமா?
நச்சுரங்களுக்கு தடை!
கடந்த ஆக.8 அன்று இந்திய அரசு பதினெட்டு நச்சு உரங்களை தடைசெய்து
உத்தரவிட்டுள்ளது. இவை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படுத்துபவை. இதில்
monocrotophos, mancozeb உள்ளிட்ட பருத்தி விவசாயிகளை பலிவாங்கிய
வேதிப்பொருட்கள் தடை செய்யப்படவில்லை. கொசுவிரட்டியில் பயன்படும் DDT யும் இதில் அடக்கம்.
2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசினால் அமைக்கப்பட்ட வர்மா கமிட்டியின்
பரிந்துரைகளின் அடிப்படையில் நச்சுரங்களின் தடை உத்தரவினை அரசு வழங்கியுள்ளது. வெளிநாடுகளில்
தடையாகி இந்தியாவில் விற்பனையாகும் 66 நச்சுரங்களை பரிசீலனைக்கு வர்மா கமிட்டி எடுத்துக்கொண்டுள்ளது.
உலகில் தடைசெய்யப்பட்டுள்ள 104 உரங்களின் பயன்பாடு இந்தியாவில் உள்ளது என்பது சூழலியலாளர்களின்
வாதம். 2015 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில் வர்மா கமிட்டி, 27 உரங்களை சோதித்து
பார்க்கவும் வலியுறுத்தியிருந்தது. எட்டுமாதங்களாக நடவடிக்கை எடுக்காத அரசு, டிச.2016
ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் DDT அல்லது டிரைஃபுளரின் ஆகியவற்றை எச்சரிக்கை வாசகங்களுடன்
பயன்படுத்த கூறப்பட்டிருந்தது. இந்தியா 1968 ஆம் ஆண்டு முதலாக 260 க்கும் மேற்பட்ட
வேதி உரங்களை தயாரிக்கவும் விற்கவும் அனுமதித்து வருகிறது.