ஏஐ டீச்சர் வந்தாச்சு!




Image result for ai teacher

டிஜிட்டல் டீச்சர்!
நியூசிலாந்தில் விரைவில் ஏஐ ஆசிரியர் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கவிருக்கிறார். வெக்டார் என்ற நிறுவனமும் Soul என்ற நிறுவனமும் இணைந்து வில்(Will) என பெயரிடப்பட்டுள்ள டிஜிட்டல் ஆசிரியர்களை தயாரித்துள்ளனர்.
சுற்றுச்சூழல், புதுப்பிக்கும் ஆற்றல் தொடர்பான நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ள வில், சூரியன், காற்று தொடர்பான பாடங்களை மாணவர்களுக்கு கணினி, டேப்லட், ஸ்மார்ட்போன் வழியாக கற்றுத்தரவுள்ளது. ஸ்கிரீனில் வில்லின் முகம் பார்த்து மாணவர்கள் கேள்வி கேட்டு பதில்களை பெறவும் வசதி உண்டு.”டிஜிட்டல் ஆசிரயரான வில் மீது பெரும் நம்பிக்கை உள்ளது. விலை மலிவான, கல்வி அனுபவம் நிறைவாக தரும் திறமை வில்லுக்கு உண்டு” என்கிறார் வெக்டார் நிறுவன முதன்மை அதிகாரி நிகில் ரவிஷங்கர். இங்கே எழுதியுள்ள வில் என்பது உதாரணம்தான். ஹியூமனாய்டு ரோபோ வரை  ஆராய்ச்சியாளர்கள் குடிசைத் தொழில் போல உருவாக்கி வருகிறார்கள். 2027 ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கு பதில் ரோபோக்கள்தான் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் என்கிறார் இங்கிலாந்து கல்வி நிபுணரான ஆன்டனி செல்டன்.

பிரபலமான இடுகைகள்