வேலைவாய்ப்பு கொடுத்தால் எங்களை நாங்களே பார்த்துக்கொள்வோம்!

சந்திரசேகர் ஆசாத்... ஊடகங்களுக்கு ராவணன். 




Bhim Army chief Chandrashekhar Azad. Photo: Pradeep Gaur/Mint



உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பீம் ஆர்மியின் தலைவர். பாஜகவுக்கு எதிரான கட்சிகள் இவருடன் கூட்டு சேர விரும்புகின்றன. ஆசாத், ஒளித்து மறைத்தெல்லாம் பேசவில்லை. பாஜகவை எதிர்த்துதான் தேர்தல் என்று கூறிவிட்டார்.

Image result for bhim army chandrashekhar azad






பீம் ஆர்மியை எப்படி தொடங்கினீர்கள்?

கன்ஷிராமின் கருத்துக்களை படித்து அமைப்பு தொடங்கலாம் என நினைத்தபோதுதான் உள்ளூர் பள்ளியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு சாதிரீதியான நெருக்கடிகள் ஏற்பட்டன. அதனை சமாளிக்க பீம் ஆர்மியை தொடங்கினோம். பாரத் இக்தா மிஷன் என்பது இதனை முன்னர் அழைத்து வந்தோம்.

உங்களது குடும்பத்தினரது கோரிக்கையை கேட்டுத்தான் உங்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டதா? 

இந்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் என்னை கைது செய்து சிறையிலடைத்தது. சிறையிலிருந்து வெளியே வந்தாலும் என்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் கைவிடப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு வெல்லும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. செப்.14 ஆம் தேதியோடு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலடைத்து வைக்கும் காலம் முடிந்துவிட்டது. என் மீது குற்றத்தை உறுதியாக்கும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை. தலித்துகளின் ஓட்டுக்களை பெற இதுபோல விடுதலை நாடகத்தை அரசு நடத்துகிறது. உண்மையிலே எஸ்.சி/ எஸ்டி இனத்தவர் மீது பாசம் இருக்கிறது என்றால் அவர்களுக்கு இட ஒதுக்கீடுகளில் முன்னுரிமை கொடுத்து அதனை அரசியலமைப்பு சட்டத்தின் பகுதியாக்கலாமே!

Image result for bhim army chandrashekhar azad





சிறையிலிருந்து வெளியே வந்ததும் 2019 தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பேன் என்று கூறியுள்ளீர்களே? சிறையில் அடைத்த கோபம் காரணமா?

பழிக்குப்பழி அரசியல் இதுவல்ல. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் பட்டியல் இனத்தவர்கள் மீது தீவிரமான தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை ஆட்சியிலிருந்து அகற்றுவதே எங்கள் நோக்கம்.

இந்திய அரசு சமையல் எரிவாயு, மின்சாரம், வீடு, கடன்கள் என அனைத்தையும் முத்ரா திட்டம் வழியாக மக்களுக்கு வழங்குவதாக கூறுகிறது. பட்டியலினத்தவர்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை என்கிறீர்களா?

எஸ்சிகளுக்கு அரசு வேலை கொடுத்தாலே அவர்கள் அரசு கொடுக்கும் அனைத்தையும் சுயமாக அவர்களே வாங்கிக்கொள்வார்கள். இருபது லட்சத்திற்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகளை தருவதாக பாஜக கூறியது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்டால் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை அறிய முடியவில்லை.  
Image result for bhim army chandrashekhar azad





சஹாரன்பூரில் இரு இனக்குழுக்களுக்கு இடையே நடந்த கலவரத்தை தவிர்த்திருக்க முடியுமா?

வன்முறையை ஏற்படுத்தியவர்கள் அதனை தடுத்திருக்க முடியும். தாக்கப்பட்ட எங்களது அமைப்பினரும் நானும் கைது செய்யப்பட்டோம். அப்படி கலவரத்தை நாங்கள் தூண்டியிருந்தால் அன்றைய தினமே எங்களை கைது செய்திருக்கலாமே? கலவரம் தொடர்பாக நாங்கள் மாவட்ட நீதிபதியை சந்தித்தபோது கூட இதுதொடர்பாக எந்த புகாரும் எங்கள் மீது வைக்கப்படவில்லை.

உங்களது அடுத்த நடவடிக்கை என்ன?

இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் எஸ்சி மக்களை பாதுகாக்கும் விதமாக பீம் ஆர்மியை பலப்படுத்துவதுதான். எங்களது பணியே எங்களது அடையாளம்.




ஆக்கம்: ச.அன்பரசு
தொகுப்பு: வின்சென்ட் காபோ, ரிச்சர்ட்
நன்றி: கியான் வர்மா, லிவ் மின்ட்



பிரபலமான இடுகைகள்