இங்கிலாந்திலுள்ள நிலத்தின் சொத்து மதிப்பு அதிகரிப்பு
இங்கிலாந்தை கவிழ்க்கும் நிலம்!
ஜி-7 நாடுகளிலேயே இங்கிலாந்தில்தான் நிலமதிப்பு கிடுகிடுவென
உயர்ந்துவருவதை தேசிய புள்ளியியல் நிறுவன(ONS)
ஆய்வு சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளது. இங்கிலாந்து அரசின் மொத்த செல்வ மதிப்பு
12.7 ட்ரில்லியனில் 6.5 ட்ரில்லியன் சொத்து நிலத்தில் உள்ளது. பிறநாடுகளான பிரான்ஸ்
42%, கனடா 39%, ஜப்பான் 35%, ஜெர்மனி 26% ஆகிய நாடுகளின் நிலங்களின் மதிப்பை விட இங்கிலாந்தில்
அதிகம். “வீட்டை வாங்கி அதில் பணத்தை முதலீடு செய்வதை விட வேறு வழிகளை பார்ப்பது நல்லது”
என்கிறார் லண்டன் பொருளாதார பள்ளியைச் சேர்ந்த பால் செஷையர்.
வீடுகளின் மீதான மதிப்பு அதிவேகமாக உயர்வது வாழும் மக்களை பெரிதும்
பாதிப்பதோடு காலாவதியான பொருளாதாரக்கொள்கையை மாற்றவேண்டியதையும் அடையாளம் காட்டுகிறது
என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. “தற்போதைய சந்தை மதிப்புபடி வீடு, அலுவலகங்கள்,
எந்திரங்கள், சொத்து ஆகியவற்றை மதிப்பிட்டுள்ளோம்” என்கிறார் தேசிய புள்ளியியல் மையத்தைச்
சேர்ந்த டேனியல் குரோவ்ஸ். அமெரிக்கா லக்ஸம்பர்க்கை அடுத்து இங்கிலாந்தில்தான் தனி
வீடு ஒன்றின் சொத்து மதிப்பு தோராயமாக ரூ.3,65,31,492 எனுமளவில் அதிகரித்துள்ளது.