நேபாளத்தின் ஸ்கேட்டிங் பூங்கா!
ஸ்கேட்டிங் பூங்கா!
நேபாளத்தின் காத்மாண்டுவில் நாட்டிலேயே
முதல் ஸ்கேட்டிங் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. உஜ்வல் தங்கல் என்ற உள்ளூர் ஸகேட்டிங்
வீரர் இதனை உருவாக்கியுள்ளார். தன் பதினான்கு வயதிலிருந்து ஸ்கேட்டிங் போர்டு ஏறி சுற்றி
உலகம் சுற்றிவந்தவர் காத்மாண்டுவில் முதலில் தொடங்கியது ஸ்கேட்டிங் பொருட்களை விற்கும்
கடைதான்.
2014 ஆம் ஆண்டு பாங்காக் பயணத்தை
முடித்துக்கொண்டு ஊர் திரும்பியவர் கடை மூலம் பல்வேறு ஸ்கேட்டிங் விளையாட்டிற்கான பொருட்களை
பார்த்து பார்த்து சேர்த்தார் உஜ்வல் தங்கல். ஸகேட்டிங் பூங்கா தொடங்குவதற்கான வேலைகளின்
ஆரம்பம் என இம்முயற்சியை கூறவேண்டும். இதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து கனவை நிறைவேற்றியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில ஸ்கேட்டிங் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இன்றும் இவ்விளையாட்டு போதைப்பொருள், குற்றவாளிகள் சார்ந்ததாக பார்க்கப்பட்டு வருவதை
மாற்ற உஜ்வல் தங்கல் மாற்ற முயற்சித்து வருகிறார்.