புகழ்பெற்ற பிராண்டுகளில் களைக்கொல்லி கலப்படம்!





Image result for quaker oats




களைக்கொல்லி உணவு?

காலை உணவாக உண்ணும் சீரியோஸ், லக்கி சார்ம்ஸ், க்வாக்கர் ஓட்ஸ் ஆகிய நிறுவனத்தின் உணவு பாக்கெட்டுகளில் களைக்கொல்லி வேதிப்பொருளான கிளைபாஸ்பேட் இருப்பதை சூழல் அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

அண்மையில் கிளைபாஸ்பேட் ஏற்படுத்தும் புற்றுநோய் அபாயத்தை தெரிவிக்காததற்காக மான்சான்டோ(ரவுண்ட்அப் புகழ்), 289 மில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக ஹோட்கின் லிம்போமா நோயால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கியுள்ளது. களைக்கொல்லியாக பயன்படும் கிளைபாஸ்பேட், புற்றுநோயை ஏற்படுத்தாது என்பதே மான்சான்டோ நிறுவனத்தின் வாதம்.

2015 ஆம் ஆண்டு WHO, மேற்கண்ட வேதிப்பொருளை புற்றுநோய் காரணி என்று கூறியுள்ளது. தினசரி 1.1 மி.கி உண்ணும்போது கிளைபாஸ்பேட் உடலுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது என்பதே ஆராய்ச்சியாளர்கள் கருத்து. ஆனால் பிரேக்பாஸ்ட் உணவுகளில் கிளைபாஸ்பேட் அளவு நூறு மடங்கு அதிகமாக உள்ளது என்பது நடைமுறை நிஜம். அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா மாநிலம் வேதிப்பொருட்களுக்கான பாதுகாப்பு அளவை தற்போது வரையறுத்து வருகிறது.