விண்வெளியில் லிஃப்ட் சாத்தியமா?




Image result for space escalator
விண்வெளியில் ஏணி!
பூமிக்கும் விண்வெளிக்கும் லிஃப்ட் அமைப்பது விண்வெளி ஆராய்ச்சியாளர்களின நூற்றாண்டு கனவு. ஆனால் இதற்கான வடிவமைப்பு குறித்த குழப்பங்கள் நிலவிவந்தன. தற்போது ஷிசுவோகா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் விண்வெளி லிஃப்டிற்கான வடிவமைப்பை விரைவில் நிஜமாக்க போகிறார்கள்.
விண்வெளியில் 6 செ.மீ நீளம், 3 செ.மீ அகலம் கொண்ட லிஃப்ட்டை ஜப்பானியக்குழு அமைக்க மெனக்கெட்டு வருகிறது. ஜப்பான் விண்வெளி அமைப்பின் H-2B ராக்கெட் இரண்டு மினி செயற்கைக்கோள்களுடன் லிஃப்டை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.  ராக்கெட்டுகள் பத்து மீட்டர் தொலைவு இடைவெளியில் நிலைநிறுத்தப்பட்டு லிஃப்ட் மோட்டார்கள் மூலம் இயங்கும். அதனை செயல்பாட்டை செயற்கைக்கோள்களிலுள்ள கேமராக்கள் லிஃப்டின் செயல்பாடுகளை கண்காணிக்கும். திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி லிஃப்ட் உருவாகினால் கிலோகிராமுகு 220 டாலர்கள் மட்டுமே செலவாகும். ரீயூஸபிள் ராக்கெட்டுகள் நடைமுறைக்கு வந்துவிட்ட காரணத்தால் விண்வெளிக்கு பொருட்களை எடுத்துசெல்வது ஈஸி என்பதோடு அதற்கான செலவுகளும் கணிசமாக குறையும்.

பிரபலமான இடுகைகள்