வண்ணத்துப்பூச்சி ஆய்வு!




© Sam Green


Mini பேட்டி 

பூச்சிகள் ஆய்வாளராக தற்போதைய தங்களது பணி..?

பட்டாம்பூச்சிகளின் பரிமாண வளர்ச்சியை அளவிட்டு வருகிறேன். இதற்காக கோஸ்டாரிகா, ஈகுவடார், பனாமா ஆகிய நாடுகளின் காடுகளில் பணிபுரிந்துள்ளேன்.

என்ன சவால்களை சந்தித்தீர்கள்?

ஈகுவடாரிலுள்ள இடத்திற்கு பதினைந்து மணிநேரம் பஸ்ஸிலும் பின்னர் படகிலும் பயணம் செய்த அனுபவத்தை மறக்க முடியாது. அங்குள்ள பழங்குடிகளின் வாழ்க்கையும், என்னை சுற்றி வந்த குரங்கு குட்டிகளுமாக இயற்கை சூழ்நிலை என்னை ஈர்த்தது.  

காடுகளில் உங்கள் ஆராய்ச்சி..?

பட்டாம்பூச்சிகளை சேகரிப்பது. 9 மீட்டர் அளவு பறக்கும் பட்டாம்பூச்சிகளை சேகரிக்கும் பணி சாதாரணமல்ல. நகரத்தில் வாழும் சூழலில் பஸ், ரயிலை தவறவிடுவது பிரச்னை. காடுகளில் பாம்பு கடிகள், சிலந்தி – அட்டைப்பூச்சி கடிகள், குரங்குகளில் மிரட்டல்கள் ஆகியவற்றை சமாளிக்க வேண்டும். ஹவ்லர் குரங்கள் என்மீது சிறுநீர் கழித்து என்னை அங்கிருந்து விரட்ட முயன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

நீங்கள் முன்னாள் மாடலாக இருந்தவர் அல்லவா?

மேல்நிலைப்பள்ளியில் அழகிப்போட்டி ஆர்வம் இருந்தது. ஆனால் என் இதயம் அறிவியல் பக்கம் இழுக்க, இங்கு வந்துவிட்டேன். ஒரே மாதிரி ஸ்டீரியோ டைப் அழகியாக இல்லை என்ற சந்தோஷப்படுகிறேன். சிலசமயங்களில் லண்டன் ஃபேஷன்வாக்கில் பங்கேற்றது போல நண்பர்கள் அழைத்தால் செல்வேன். பூச்சிகள் ஆய்வாளராக நிறையப்பேர் உருவாவது அவசியம். பெற்றோர் இப்பணியை வேலை என நம்ப மறுப்பது தவறு.  

-டாக்டர் சூசன் ஃபிங்பெய்னர், சிகாகோ பல்கலைக்கழகம்