நேர்காணல்: நகர நக்சலைட் - நீதிவிசாரணைக்கு உதவாத வார்த்தை!




Image result for ajay sahni



"நகர நக்சலைட் போன்ற வார்த்தைகளால் நீதிவிசாரணைக்கு பிரயோஜனமில்லை"

அஜய் சாஹ்னி, Institute for Conflict Management. 


தமிழில்:ச.அன்பரசு




Image result for urban naxals






நக்சலைட்டுகளின் ஆதரவாளர்கள் என்று கூறி இந்திய அரசு ஐந்து மனித உரிமை ஆர்வலர்களை கைது செய்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள்(UAPA) பிரிவில் வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ள ஐவரின் கைது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக.28 அன்று கைதான செயல்பாட்டாளர்கள் குறித்து அரசு சமர்ப்பித்த வாதங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

அரசு சமர்ப்பித்த ஆதாரங்கள் அனைத்தும் நகைச்சுவை பிரதியாக தோன்றுகின்றன. விசாரணை எனும் தண்டனையை செயல்பாட்டாளர்களுக்கு வழங்கவே இந்த நாடகம் நிகழ்த்தப்படுவதாக தோன்றுகிறது. ஆமைவேக நீதித்துறையின் விசாரணை முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பிணை கிடைக்கலாம் அல்லது மறுக்கப்பட்டு சிறை வாழ்க்கையையும் அனுபவிக்க நேரிடலாம். அதிகாரிகளின் குற்றச்சாட்டின் பின்னணியை நீதிபதி கவனிக்காதபோது குற்றம்சாட்டப்பட்டவர்களை மீட்பது கடினமான பணி.

அருண் ஃபெரிரா, வதந்தி படுகொலைகள் குறித்த புகைப்பட கண்காட்சி மூலம் மாவோயிஸ்டுகளை தேர்ந்தெடுத்ததாக அரசு வழக்குரைஞர் கூறியுள்ளாரே?

வதந்தி படுகொலைகளுக்கு எதிராக போராடியதுதான் குற்றமென்றால் நாட்டில் பாதி மக்களை நாம் சிறையில்தான் தள்ளவேண்டும். மாணவர்களை மாவோயிஸ்டுகளாக சேர்த்த அரசு வழக்குரைஞரின் வாதத்தை  நீதிமன்றம் ஏற்கவில்லை. அருணின் கருத்தினால் இரண்டு இளைஞர்கள் ஈர்க்கப்பட்டது உண்மையாக இருந்தாலும் அதனை சட்டவிரோத செயல்பாடு பிரிவில் பதிவு செய்தது தவறானது. மாவோயிஸ்ட் செயல்பாட்டில் ஈடுபட்டதை உறுதியாக நிரூபித்தால் மட்டுமே அச்சட்டப்பிரிவில் வழக்கு பதியலாம். மேலும் பாசிச முன்னணி எனும் பிரிவில் செயல்பாட்டாளர்கள் திரண்டாலும் அதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பாதுகாப்பு உண்டு.

வரவர ராவ், நேபாளத்திலுள்ள ஆயுதவியாபாரியிடம் ஆயுதங்கள் வாங்கியதாக கூறப்படுவது உண்மையா?
மாவோயிஸ்டுகளின் மீது கரிசனம் கொண்டவராக இன்றல்ல; பல்லாண்டுகளாக அறியப்பட்டு வருபவர் வரவர ராவ். ஆயுதங்களின் பட்டியலை கொடுத்தவரும் வாங்கியவரும் ஏற்பது நீதிமன்றத்திற்கு முக்கியம். இதில் வரவர ராவ் நடுவிலிருப்பதால் ஆயுதபேரம் நடைபெற்றது என காவல்துறை நிரூபிப்பது கடினம். நேபாளத்திலிருந்து ஆயுதங்கள் வருகிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடையாது.

நகர நக்சலைட்டுகள் என்பது இவ்விவகாரத்தில் கூறப்பட்ட வார்த்தைகளில் ஒன்று.

நகர நக்சலைட், அரை மாவோயிஸ்ட் என்ற வார்த்தை பதங்கள் சமீபத்திய கண்டுபிடிப்பு. இவை நீதிமன்றத்தின் விவாதங்களுக்கு பயன்படாது. குற்றச்சாட்டுகளுக்கான வலுவான ஆதாரங்களே ஒருவர் குற்றச்செயலில் ஈடுபட்டாரா இல்லையான என்பதை தீர்மானிக்க உதவும். மாவோயிஸ்டுகளின் கட்சி என்பதும் அதன் பிரசாரங்களும் என்பதும் வேறுவேறு. இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகள் இதனை தடை செய்யவில்லை.


பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கடிதம் ஒன்றை குறிப்பிடுகிறார்கள். ஆனால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாக உள்ளதே?


பிரதமரை கொலை செய்வதற்கான திட்டமிடலை கடிதம் மூலம் எழுதி பரிமாறிக்கொள்வது நம்பகமான செய்தியாக இல்லை. சத்தீஸ்கர் மாநிலத்தில் பினாயக் சென்னை இதுபோல பொய்புகார்களை சொல்லி சிறையிலடைத்தார்கள். ஆனால் அவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிற்கவில்லை.
நன்றி: scroll.in