எதிர்காலத்திற்கு செல்ல கார்தான் பெஸ்ட்!
பிட்ஸ்!
பிறந்து முதல் ஆறு ஆண்டுகள் நிலத்தில் இறங்காமல் வாழும் பழக்கம்
கொண்டது அல்பட்ராஸ்(Albatross) பறவை.
துறவி லூயிஸ் என அழைக்கப்படும் பிரான்ஸ் மன்னர் ஒன்பதாம் லூயிஸ்(1224-1270)
பிச்சைக்காரர்களுடன் சமபந்தி உணவு சாப்பிட்டதோடு, நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் வாதிடும்
முறையை நடைமுறைப்படுத்தினார்.
எகிப்திலிருந்த தொன்மை நகரமான அலெக்ஸாண்டிரியாவிலுள்ள நூலகம்
புகழ்பெற்றது. கப்பலில் புதிய நூலை கொண்டுவருபவர்கள் அதனை நூலகத்தில் நகலெடுத்துக்
கொண்டு மூலநூலை அங்கு ஒப்படைத்து செல்வது வழக்கம்.
ஸ்மார்ட்போன் பேட்டரியை ரீசார்ஜ் செய்து ஒருநாள் முழுக்க பயன்படுத்த
ஒரு துளி பெட்ரோல் போதும்.
பேக் டு தி ஃப்யூச்சர் படத்தில் டைம் மெஷினாக பயன்படுத்த இயக்குநர்
ராபர்ட் ஸெமகிஸ், நினைத்தது, குளிர்சாதனப்பெட்டியைத்தான். ஆனால் குழந்தைகள் அதனை பயன்படுத்தினால்..?
என யோசித்தவர் டைம் மெஷினை காராக மாற்றிவிட்டார்.