பசுமை ஆட்டோ - இலங்கை இளைஞரின் முயற்சி!




Image result for sasiranga de silva


பசுமைவழியில் இலங்கை!

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பொதுப்போக்குவரத்து தாண்டி உலகப்புகழ்பெற்றது ஆட்டோக்கள்தான்(Tuk-Tuk). இலங்கையைச் சேர்ந்த பொறியாளரான சசிரங்கா டி சில்வா, இந்த ஆட்டோக்களின் ஒலியை மாற்றி சூழலை காப்பாற்றும் சிந்தனையை செயல்படுத்தி வருகிறார். மலிவான விலையில் பயன்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டாரை உருவாக்கி ஐ.நாவின் உதவித்தொகை 10 ஆயிரம் டாலர்களை வென்று சாதித்திருக்கிறார் சசிரங்கா.

கொழும்புவிலுள்ள மொராட்டுவா பல்கலை ஆசிரியரான சசிரங்கா ஒரு மில்லியன் மக்களுக்கான எந்திர கிட்டை உருவாக்கி சோதித்து வருகிறார். இந்தியாவிலிருந்து ஆட்டோக்களுக்கான டூ ஸ்ட்ரோக் எஞ்சின்களை இறக்குமதி செய்த இலங்கை அரசு, 2008 ஆம் ஆண்டு மாசுபாடு காரணமாக அதனை தடைசெய்துவிட்டது. வங்கதேசம், இந்தியாவில் பெரும்பகுதி ஆட்டோக்கள் இயற்கை எரிவாயுக்கு மாறியுள்ளன. இயற்கை எரிவாயு வண்டி விலை 4,300 டாலர்கள் என்றால் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் வண்டி 5,900 டாலர்கள் செலவாகிறது. "நூறு கி.மீ தொலைவுக்கு சார்ஜ் செய்யும் நிலையங்கள் தேவை." என்கிறார் ஓட்டுநர்கள் சங்க தலைவர் ஏ.டி.ஆல்விஸ். விரைவில் கொழும்புவை ஆசியாவின் பசுமை நகராக மாற்றிக்காட்டுவதே என கனவு என வெற்றிக்குறி காட்டுகிறார் சசிரங்கா டி சில்வா.  

பிரபலமான இடுகைகள்