பிறநாட்டு நிதியை ஏற்காமல் வாரி வழங்கும் இந்தியா!




Image result for india and sri lanka


வள்ளல் இந்தியா!

இந்தியா தாய்லாந்து,அரபுநாடுகள் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து இயற்கை பேரிடர்களுக்கான நிதியை பெற மறுத்துவருவதுதான் ஹாட் நியூஸ். வாங்குவதை விட பிறருக்கு கொடுக்க தொடங்கியுள்ளது இந்தியா.

2004 ஆம் ஆண்டு இதற்கான சட்டத்திருத்தத்தை அமுல்படுத்திய மன்மோகன்சிங், “பேரிடர்களை முடிந்தவரை இந்தியா சுயமாக சமாளிக்கும். நிலைமை கைமீறினால் வெளிநாடுகளின் உதவியை நாடும்” என்று கூறினார். சுனாமியின்போது இந்தியா பிறநாடுகளின் உதவியை ஏற்கவில்லை.

சிக்கலான சூழல்களில் ஸ்ரீலங்காவுக்கு 25 மில்லியன், இயற்கை பேரிடர்களின்போது தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியாவுக்கு ஒரு மில்லியன் என டாலர்களை உணவு, அத்தியாவசியப் பொருட்களுக்கு அள்ளிவழங்கிய வரலாறு இந்தியாவுக்கு உண்டு.

பாஜக ஆட்சியிலிருந்தபோது லத்தூர் நிலநடுக்கம்(1993), குஜராத் நிலநடுக்கம்(2001), வங்காள வெள்ளம்(2002) ஆகிய காலகட்டங்களில் வெளிநாட்டு நிதியை பெற்று சூழலை சீரமைத்தது. 2005 ஆம் ஆண்டு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளபாதிப்புக்கு 25 மில்லியன் டாலர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய இந்தியா வெளிநாட்டு நிதியை ஏற்கவில்லை. தெற்காசிய நாடுகளுக்கு வாரி வழங்கும் இந்திய சொந்த மாநிலங்களின் மேலும் கரிசனம் காட்டுவது இந்திய ஒற்றுமையை காக்க உதவும்.
   


பிரபலமான இடுகைகள்