ஸ்டார்ட்அப் மந்திரம் - 16-18
16
ஸ்டார்ட்அப் மந்திரம்
கா.சி.வின்சென்ட்
ஸ்டார்ட்அப்பின்
தொழில்முயற்சிகளின் தொடக்கத்திலேயே நிதியைப் பெறுவது விற்பனை முயற்சியை
அதிகரிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
இ-வணிக தளங்களாக இருப்பது நிதியைப் பெறுவதோடு அதனை எளிதில் லாபமாக மாற்றவும்
உதவும். ஆனால் இது அனைத்து ஸ்டார்ட்அப்களுக்கும் பொருந்தாது. ஓலா, உபர், பேடிஎம் ஆகிய
நிறுவனங்கள் சில இலவசங்களை அள்ளி வழங்குவது எதிர்காலத்தில் குறையும் என்கிறார்கள்
மார்க்கெட் வல்லுநர்கள்.
மார்க்கெட்டை
கவனமான கவனித்தாலே எந்தவித தொழிலை தொடங்கலாம் என்று புரிந்துவிடும் ஜாஸிவ் சலுஜா
போல. ஹார்லி டேவிட்ஸன் பைக்கை அசெம்பிள் செய்வதற்கான செய்தி பரவியிருந்த
நேரத்தில் மெக்கின்சி நிறுவனத்தில் செய்து வந்த வேலையை விட்டு ஹைநோட் பர்ஃபாமன்ஸ்
என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
பைக்குகளுக்கான பொருட்கள், சர்வீஸ் ஆகியவற்றை
இவர் தருவதோடு தாராளமான விலைகொண்ட பைக்குகளையும் விற்கிறார். "தொழிலில் முக்கிய சவால்,
சந்தையை இணைப்பதுதான். டெல்லியின்
தொடங்கியுள்ள கடை மூலம் விற்பனை,
மார்க்கெட்டிங், ஆன்லைன் விஷயங்களை
செய்கிறோம்" என்கிறார் ஜாஸிவ் சலுஜா.
டிஜிட்டல் கடன்!
அண்மையில் இன்னோவென்
கேபிடல் நிறுவனம் செய்த ஆய்வில் ஸ்டார்ட்அப்களுக்கான முதலீடுகளை தேடுவது கடினமான
சவால்களை தருவதாக மாறியுள்ளது என தெரியவந்துள்ளது. இதில் நூறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
41 சதவிகித ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதலீட்டாளர்களை தேடுவதில் பல்வேறு
சவால்களை சந்தித்ததை ஒப்புக்கொண்டுள்ளன. திறமையான ஆட்களை ஸ்டார்ட்அப்களை நிர்வகிக்க தேர்ந்தெடுப்பது கடினமாக
உள்ளது என கூறிய நிறுவனங்களின் எண்ணிக்கை 32
சதவிகிதம்.
28% சதவிகித நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கண்டறிவதில் தடுமாறியுள்ளன. கடன்களைப் பெறுவதில் 18
சதவிகித நிறுவனங்கள் தடைகளை சந்தித்ததாக கூறியுள்ளன.
வரிக்கொள்கை(41%), நிதியுதவி(41%), டிஜிட்டல் கட்டமைப்பு(33%), தொழில் முனைவோருக்கான விளம்பரம்(29%) ஆகியவற்றை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாக ஆய்வில் கூறியுள்ளன.
முதலீடு திரட்டுவதற்கு
நிறுவனங்கள் 4 மாதங்களை சராசரியாக எடுத்துக்கொள்கின்றன. ஸ்டார்ட்அப்களின் நிர்வாகிக்குழுக்களில் 54% பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது நம்பிக்கை தரும் முயற்சி. கடந்த ஆண்டுகளில் இதன் அளவு 42
சதவிகிதமாக இருந்தது.
வாசிக்கவேண்டிய
நூல், How to Win Friends & Influence People – Dale Carnegie
ஸ்டார்ட்அப் மந்திரம்!
இ- மருந்து ஈஸி!
கா.சி.வின்சென்ட்
அமெரிக்காவுக்கு
அடுத்தபடியாக இந்தியா டிஜிட்டல் முறையிலான கடன் நிறுவனங்களின் வளர்ச்சியில்
முன்னணியில் உள்ளது. "பெரிய
நிறுவனங்களுக்கும் சிறிய நிறுவனங்களுக்கும் கடன்பெறும் அளவில் வேறுபாடு உண்டு.
சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் 2 சதவிகித அளவில் கடன் நிறுவனங்களிடம் கடன்பெற்றுள்ளன." என்கிறார் கேபிடல் ஃபிளோட் நிறுவனத்தின் இயக்குநரான கௌரவ்
இந்துஜா. இத்துறையில் லெண்டிங்கார்ட், கேபிடல் ஃப்ளோட் ஆகியவை முக்கியமான நிறுவனங்கள். கேபிடல் ஃப்ளோட், 110 மில்லியன் டாலர்களைப் பெற்று 60 ஆயிரம் வியாபாரிகளுக்கு உதவியுள்ளது.
சிறு,குறு தொழிலுக்காக 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம்
வரையிலான தொகை கடனாக டிஜிட்டல் நிறுவனங்களிலிருந்து வழங்கப்படுகிறது. இந்தியாஅசெட்ஸ் நிறுவனத்தை தொடங்கிய முன்னாள் வங்கி
ஊழியர்களான சீமா ஹர்ஷா, சிவம்
சின்கா ஆகியோர் 2 ஆயிரம்
கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை விற்கும்வரை தங்கள் நிறுவனத்திற்கு முதலீட்டை
கோரவில்லை. "நாங்கள் முதலில் இந்த
ஐடியாவை சொன்னபோது முதலீட்டாளர்கள் ஆச்சரியப்பட்டனர். ரியல் எஸ்டேட் கடந்து பல்வேறு விஷயங்களை பேசிய முதலீட்டாளர் தன் நண்பர்களின் மூலம் ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்கு உதவினார்" என்கிறார் சீமா ஹர்ஷா.
மருந்துகளிலும் லாபம்!
நெட்மெட்ஸ், பார்ம்ஈஸி, மைராமெட், ஒன்எம்ஜி ஆகியவை இ-பார்மஸி துறையில் முதலீடுகளைப் பெற்று வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இத்துறையில் மட்டும் 282
மருந்து நிறுவனங்கள் இயங்கி வருகின்றன்ன. இதில் முதலீடுகளைப் பெற்றவை 20
நிறுவனங்கள் மட்டுமே.
2016-2017 வரையிலான காலகட்டத்தில்
இந்நிறுவனங்கள் பெற்ற முதலீட்டுத்தொகை 165.4
மில்லியன் டாலர்கள்.
கடந்தாண்டு இந்திய அரசு
ஆன்லைனில் மருந்துகளை விற்பதற்கான விதிமுறைகளை வெளியிட்ட பிறகு இ- பார்மஸி ஸ்டார்ட்அப் முயற்சிகள் அதிகரித்துள்ளன. சாதாரணமாக மருந்துகளை விற்பதற்கும் ஆன்லைனில் விற்பதற்குமான
எல்லைக்கோடுகள் அழிந்துள்ளதா? என
1mg நிறுவன துணை இயக்குநரான
பிரசாந்த தாண்டனிடன் கேட்டோம். "அரசு விதிமுறைகள் இணையம் மற்றும் நேரடி மருந்துகடைகள் இரண்டுக்குமான
விதிமுறைகள் ஒன்றாக இருப்பதால் வணிகம் எளிதாகியிருக்கிறது" என்கிறார்.
இந்திய அரசின் மத்திய மருந்து உரிம ஆணையத்தில்
பதிவு செய்யாமல் இ-பார்மஸிகள் இயங்குவது
கடினம். விதிகளின் கடுமை குறைந்தால்
இத்துறையில் வளர்ச்சி சாத்தியம் என இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஸ்டார்ட்அப்
மந்திரம் 18!- கா.சி.வின்சென்ட்
"மத்திய மருந்து உரிம ஆணையம் தன் கறார் அணுகுமுறையை மாற்றினாலே இ-பார்மஸிகள் வணிகம் விரிவாகும்"
என்கிறார் மைராமெட் நிறுவனத்தின் துணை நிறுவனரான ஃபைஸன் அசீஸ். இ-பார்மஸிக்கான
சந்தை தோராயமாக 8 - 10 ஆயிரம்
கோடியாக உள்ளது. தற்போதுள்ள நிறுவனங்கள் சிறியவை
என்றாலும் வளர்ச்சிக்கான வாய்ப்பு எல்இடி போல பிரகாசமாக உள்ளது.
இணையம் இந்தியாவில்
பரவலாகாத காலத்திலேயே இந்தியாமார்ட் உருவாகிவிட்டது. இன்று இந்தியாமார்ட்டில் 3,300
பணியாளர்கள், 40 லட்சம் வியாபாரிகள், 3.5 கோடி வாடிக்கையாளர்கள்
இணைந்துள்ளனர். "1995 ஆம்
ஆண்டு இணைய அனுமதியை
அரசு அளித்தவுடன் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டேன். அப்போதும் தனிநபர்களுக்கு இணையவசதி அனுமதி
கிடையாது. 1996 ஆம் ஆண்டு இந்தியாமார்ட்டை
இணையத்தில் உருவாக்கி வணிக கண்காட்சியில் பங்கேற்றோம்."
என்கிறார் இந்தியாமார்ட்டின் தலைவரான தினேஷ் அகர்வால்.
டயல்அப் கனெக்ஷனில் கிடைத்த இணையத்தை
மக்களுக்கு விளக்குவதே தினேஷுக்கு
பெரிய சவாலாக இருந்திருக்கிறது.
வெப்டிசைனர்களுக்கு தட்டுப்பாடு, டாலர்களை இணையத்தில் அனுப்ப காலதாமதம், ஆகிய
சவால்களை கடந்து வந்திருக்கிறார் தினேஷ். முதலீட்டிற்கான
பணத்தை குடும்பத்திடமும், நண்பர்களிடமிருந்தும்
பெற்றவர் 1997 ஆம் ஆண்டு மார்ச்
இறுதியில் பெற்ற லாபம் ரூ. ஆறு
லட்சம். "1999 ஆம்
ஆண்டில் இன்டர்நெட் பிரபலமாக
எங்கள் கம்பெனி ஊழியர்களை விலைபேச போட்டியாளர்கள் கடுமையாக முயற்சித்தனர். அப்போது லாபம் ரூ.52 லட்சம்
மட்டுமே" என்கிறார் தினேஷ்
அகர்வால்.