உலகில் பார்க்கவேண்டிய இடங்கள்!


உல்லாச சுற்றுலா!
Image result for Warner Bros. World, abudhabi

Warner Bros. World, abudhabi

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள வார்னர் நிறுவனத்தின் தீம்பார்க். 38 ஏக்கர்களில் 1 பில்லியன் டாலர்கள் செலவில் உருவாகியுள்ளது. இங்கிலாந்தின் பக்கிங்காம் பேலஸ் தோட்டத்தை விட சற்றே சிறிதான இங்கு உங்களை மகிழ்விக்க பேட்மேன், சூப்பர்மேன் உள்ளிட்ட டிசி காமிக்சின் அத்தனை விஷயங்களும் உண்டு.

Tippet rise art center, Montana

2016 ஆம் ஆண்டு அமெரிக்க மாநிலமான மான்டனாவில் திறக்கப்பட்ட கலை அருங்காட்சியகமான திப்பெட், 10,260 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. சிற்பங்கள், இசை அரங்கு, திறந்தவெளி சினிமா அரங்கு என கலைரசிகர்களுக்கு திகட்டாத இன்பம் அளிக்க கூடிய இடம் இது. ஓவியரான கேத்தி தன் கணவர் பீட்டருடன் இணைந்து இம்மையத்தை தொடங்கியுள்ளனர்.

Giraffe manor,Nairobi

கென்யாவின் நைரோபியில் 1970 ஆம் ஆண்டு முதலாக இயங்கி வரும் 140 ஏக்கர் வனப்பூங்கா. சற்றே அசந்தால் வெளியிலிருந்து கழுத்தை மட்டும் உள்ளே நீட்டி தட்டிலுள்ள ஐட்டங்களை அபேஸ் செய்யும் ஒட்டகச்சிவிங்கிகளின் ஜோவியல் தன்மை இங்கு ஸ்பெஷல். சூழலியலாளர் பெட்டி லெஸ்லியின் முயற்சியால் உருவான பூங்கா இது.