கல்வி வேலை வழிகாட்டி மனிதர்!



Image result for the case against education


பனிரெண்டு வயதில் வேலை!

பதிமூன்று வயதில் வீடியோகேம்களுக்கு புரோகிராமிங் செய்த பிரையன் ராபர்ட்சன், பதினாறு வயது முதலே பள்ளிக்கு செல்வதில் ஆர்வம் காட்டவில்லை. பொறியியலில் சேர முயன்று தோற்றவர் மாத சம்பளத்தில் நொந்துபோகவில்லை.ஹோலாகிரேசி என்ற நிறுவனத்தின் இயக்குநராக கெத்தாக மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்கு வழிகாட்டிவருகிறார்.

“கல்லூரியில் நான்கு ஆண்டுகள் படித்து ஒருவர் பெறும் அறிவை வேலை அனுபத்தில் சில மாதங்களிலே நான் பெற்றுவிட்டேன். தியரிக்காகவே பணத்தையும் நேரத்தையும் ஏன் இழக்கவேண்டும்?” என பெருமை பேசுவதோடு, பனிரெண்டு வயதிலேயே மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை விதியாக்குகிறார். இதன்மூலம் அரசின் வரிப்பணம் மிச்சமாவதோடு பதினைந்து வயதிலேயே அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பு சந்தையில் ஜெயிக்க வழிகாட்டுகிறார்.

 கல்விமுறையை ஆராய்ச்சி செய்து தனது தீர்வுகளை The Case Against Education எனும் நூலில் எழுதியுள்ளார். அயல்நாட்டு மொழிகள், வரலாறு மட்டுமே வேலைகளுக்கு உதவும் படிப்புகளாகவும், ஹார்வர்டு மற்றும் யேல் பல்கலை ஆகியவை நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யும் தகுதியாகவும் உள்ளன. வரலாற்று ஆய்வாளர், தடகளவீரர், கவிஞர் என பள்ளிகள் அடுக்கும் எதிர்கால வேலை வாய்ப்புகள் கனவுதான் என்கிறார் தனது குழந்தைகளையும் வீட்டிலேயே வைத்து கல்வி கற்றுக்கொடுத்து வருகிறார்.