ஆங்கில திரைப்படத்தை தடுத்த சீனா!
பிட்ஸ்!
உலகிலேயே வாட்டிகனிலுள்ள வங்கியில்
மட்டுமே லத்தீன் மொழியில் இன்றும் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.
மனிதர்களின் மூளை உறைந்து போவதற்கு
Sphenopalatine ganglioneuralgia என்று
பெயர்.
போக்குவரத்து சிக்னல்களை மதிக்காது
செல்பவர்களை Jaywalker என்று குறிப்பிடுகின்றனர். Jay என்ற சொல்லுக்கு முட்டாள் மனிதர்
என்று அர்த்தம்.
1931 ஆம் ஆண்டு சீனாவின் ஹூனன்
பகுதியில் Alice In Wonderland ஆங்கிலத்திரைப்படம் தடை செய்யப்பட்டது. கரடி, சிங்கம்
உள்ளிட்ட விலங்குகள் மனிதர்களின் மொழியைப் பேசுவது அவர்களை அவமானப்படுத்துவது போல இருக்கிறது
என விநோத காரணம் சொன்னார் நகர ஆளுநர்.
உலகின் 95 சதவிகித விஸ்கி தயாரிப்பாளரான
கென்டக்கி மாநிலத்தின் அதிகாரப்பூர்வ குடிபானம், பால்.
போலந்திலுள்ள வனத்தின் பைன் மரங்கள்
90 டிகிரியில் விநோதமாக வளர்ந்து பார்வையாளர்களை ஆச்சரியமூட்டுகிறது.
துருக்கியின் அங்காரா நகரிலுள்ள
நூலகத்தில் சிறப்பு, அங்குள்ள நூல்கள் அனைத்தும் குப்பைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவை
என்பதுதான்.