தலித் சொல்லை நீக்கிய இந்திய அரசு!




Image result for dalit illustration

ஆஃப்கன் காதல்!

காதலர்களுக்கு உலகிலுள்ள எந்த தடைகளும் பிரச்னையில்லை. ஆனால் உறவுகள், சொந்தங்கள் ஆட்சேபித்தால் திருமணம் எப்படி சிதறும் என்பதற்கு ஆஃப்கன் காதலே சாட்சி.
ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஃபரீதுல் ரஃப்தாய், ஃபேஸ்புக் மூலமாக வலைவீசி உ.பியின் கலிலாபாத் நகரைச் சேர்ந்த பெண்ணுடன் நட்பானார். பின் சாட்டிங்கில் போனை தேய்த்து பேசி காதல் வளர்த்தவர்கள் கல்யாணத்திற்கும் ரெடி. காதல் விவகாரம் தெரிய வந்த இருதரப்பு பெற்றோர்களும் கூட ஓகே சொல்லிவிட்டனர். திருமணவிழா உ.பியிலுள்ள பெண் வீட்டில் தடபுடலாக ஏற்பாடானது. பங்கேற்ற உறவுகள், சொந்தங்கள் திடீரென கல்யாணம் நடக்ககூடாது. நம் பெண்ணை இன்னொரு நாட்டிற்கு அனுப்புவது சரியல்ல என்று குழந்தையாக அடம்பிடித்து போராடி அதையே சாக்காக வைத்து கல்யாணத்தை நிறுத்திவிட்டனர். ஆஃப்கன் மாப்பிள்ளை ரஃப்தாய், நெதர்லாந்திலிருந்து வந்திருந்த அவரது உறவினர்கள் அனைவரும் சமாதானம் பேசினர். ஆனால் பெண்ணின் தந்தை மகளை படிக்கவைக்கப்போகிறேன் என்று கூற ஆஃப்கன் மாப்பிள்ளை விரக்தியுடன் ஊர் திரும்பியுள்ளார்.

2

தலித்துன்னு சொல்லாதீங்க!


இந்தியாவிலுள்ள செய்தி சேனல்களுக்கு அரசின் தகவல்தொடர்பு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை சாராம்சம் மேலேயுள்ள தலைப்புதான். தலித் என்ற சொல்லை தவிர்த்து பட்டியல் இனத்தவர் என்பதை பயன்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.  
தலித் என்பதற்கு மாற்றாக பட்டியல் இனத்தவர் என்ற சொல்லை அவரவர் மொழிக்கேற்ப மொழிபெயர்த்து பயன்படுத்தலாம் என்ற உத்தரவை கடந்த மார்ச் 15 அன்றே மத்திய அரசு,  மாநில, மத்திய அரசு அலுவலகங்களுக்கும் தேசிய செய்தி வெளியீட்டாளர்கள் சங்கத்திற்கும்(NBA) அனுப்பிவிட்டது. “அரசு டிவி மற்றும் ரேடியோக்களில் தற்போதைய அரசின் உத்தரவு பல்லாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிற ஒன்றுதான். மறு அறிவிப்பு தனியார் ஊடகங்களுக்கான நினைவூட்டல்” என்கிறது தகவல்தொடர்பு அமைச்சக வட்டாரம்.
இந்திய அரசின் உத்தரவு டிவி சேனல்களுக்கு மட்டுமே பொருந்தும். பத்திரிகைகள், டிஜிட்டல் நிறுவனங்கள் இதனை அமுல்படுத்த அவசியமில்லை என்று கூறப்படுகிறது. “ஆய்வு வட்டாரங்கள், நூல்கள், அரசியல்வாதிகளின் பேச்சுகளில் சரளமாக வரும் தலித் என்ற வார்த்தையை திடீரென சென்சார் செய்து நீக்குவது என்பது எளிதல்ல” என்கின்றனர் ஊடகவியலாளர்கள். இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பதை புரிஞ்சிக்கிட்டாங்களோ?  


அணுபாதுகாப்பில் இந்தியாவின் இடம்?

அண்மையில் வெளியாகியுள்ள அணுஉலை பாதுகாப்பு பட்டியலில்(NTI) இந்தியா கடந்த ஆண்டை விட ஒரு இடம் முன்னேறி பத்தொன்பது இடத்தை பிடித்துள்ளது. பாதுகாப்பு பட்டியலில் ஆஸ்திரேலியா, கனடா ஆகிய இருநாடுகளும் 94 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளன.
என்டிஐ பட்டியல், அணுசக்தி நாடுகளை ஆராய்ந்து அதன் பாதுகாப்பு முறை, உலகளவில் புகழ்பெற்ற பாதுகாப்பு வல்லுநர்களின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு பட்டியலை தயாரிக்கிறார்கள். உலகில் ஒரு கி.கிராம் (அ) அதற்கு மேல் யுரேனியத்தை(தோரியம், புளூட்டோனியம்) பயன்படுத்தி அணு ஆயுதங்களை தயாரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 22. ஒரு கி.கி குறைவாக யுரேனியத்தை பயன்படுத்தி அணு ஆராய்ச்சி செய்யும் நாடுகளின் எண்ணிக்கை 154, என இருபிரிவாக பிரித்து இப்பட்டியல் தயாராகிறது. இதில் இந்தியா 46, பாகிஸ்தான் 44 என புள்ளிகளைப் பெற்றுள்ளன. இந்தியா, வடகொரியா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணு ஆயுதங்களின் எண்ணிக்கை உயர்த்தி வருவதால் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு ஆளாகும் வாய்ப்புள்ளது எனவும் என்டிஐ அறிக்கை எச்சரித்துள்ளது. 
  
4





பிரபலமான இடுகைகள்