செலவழிக்கும் பணம் வீணாக கூடாது - சித்தார்த் ராய் கபூர்

யுடிவியின் முகவரி.. 50 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளவர். தற்போது ராய் கபூர் பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தை தொடங்கி பதினைந்து படங்களை தயாரித்து வருகிறார். அவர் வேறுயார்? சித்தார்த் ராய் கபூர்தான். நடிகை வித்யாபாலனின் கணவர். 



Image result for siddharth roy kapoor




புதிய திறமையான ஆட்களை அறிமுகப்படுத்த விரும்புகிறீர்களா?

தயாரிப்பாளராக திரைப்படத்திற்கு நிறைய கருக்களை எழுதும் எழுத்தாளர், நடிகர்கள் தேவை. புதிய இயக்குநர்களின் கதைக்கு புதுமுகங்கள் சரிபட்டு வருவார்கள் என்றால் அதனை தடுக்க மாட்டேன். ராஜ்குமார் குப்தா, நீரஜ்பாண்டே, திபாகர் பானர்ஜி, விக்கிரமாதித்திய மோட்வானே ஆகியோரை அப்படித்தானே யுடிவி அறிமுகப்படுத்தியது.

படங்களை தயாரிப்பது எப்படி  பிடித்தமானதாகியது?Image result for roy kapoor films

படங்களை உருவாக்குவதை நேசிப்பதால்தான். செலவழிக்கும் பணம் வீணாக கூடாது. இரண்டு, கிரியேட்டிவிட்டியில் தடை இருக்க கூடாது என இரண்டு விஷயங்களையும் நான் கவனிக்கிறேன். இயக்குநரின் சிந்தனையோடு சேர்ந்து இயங்குவதை முக்கியமானதாக கருதுகிறேன்.



Image result for siddharth roy kapoor



மார்ட்டின் ஸ்கார்சி போன்ற இயக்குநர்கள் சினிமா இறந்துவிட்டது என கூறிவருகிறார்களே?

சினிமா எங்கேயும் போய்விடாது. சினிமாவின் தன்மை காலத்திற்கேற்ப மாறிவருகிறது. சினிமாவாக சரிபட்டு வரும் கதைகள் என்று சில உண்டு. டிவியில், இணையத்தில் பார்ப்பதற்கென கருத்துக்களுடன் வரும் படைப்புகள் வேறுவகையைச் சார்ந்தவை.

கொங்கனா சென்னின் எ டெத் இன் தி கன்ஞ், திபேஷ் ஜெயினின் கலி குலெய்யான் உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்கள் தியேட்டரிலும் நன்றாக ஓடியது. இந்த படங்களுக்கு பெரியளவு மார்க்கெட்டிங் தேவையா?

இன்று திரைப்படங்கள் வெல்வதற்கு அதன் கான்செப்டும், மார்க்கெட்டிங்கும் முக்கியம். இணையத்தில் சில படங்கள் வெற்றி பெற்றாலும் பெரியளவு ரசிகர்களை ஈர்ப்பதில் தியேட்டர் முன்னிலை வகிக்கிறது. தொழில்நுட்பம் வளரும்போது சினிமா மீதான ஆர்வம், காதல் குறைந்தாலும் அதற்கு தொழில்நுட்ப வளர்ச்சியை குறை சொல்லக்கூடாது.

மும்பையில் நடந்த திரைக்கதை எழுத்தாளர்கள் மாநாட்டில் திரைக்கதை எழுத்து மோசமாகி வருகிறதென கூறியுள்ளனரே ...

இது பாலிவுட் மட்டுமல்ல. ஹாலிவுட்டிலும் உண்டு. எழுத்தாளர்களுக்கு உரிய சம்பளம் இங்கு கிடையாது என எழுத்தாளர்கள் சொன்னாலும் அது உண்மையல்ல. எழுத்தாளர்களும் தயாரிப்பாளர்களும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறுவது நிற்கவேயில்லை. எழுத்தாளர்கள் சினிமா உருவாக்கத்தின் ஒரு அங்கம். இயக்குநர் அவரின் பாணியில் எழுத்தாளரின் கருத்தை எடுத்து உருவாக்குவார். எழுத்தாளர்களுக்கு சினிமா கடந்த பல்வேறு வாய்ப்புகள் இன்று உள்ளன


ஆக்கம்: ச.அன்பரசு
தொகுப்பு: வின்சென்ட் காபோ
நன்றி: சஞ்சுக்தா சர்மா, லிவ் மின்ட் 




பிரபலமான இடுகைகள்