உடல் வெப்பநிலை மாறுவது எப்படி?
உடலின் வெப்பநிலை!
உடலின் இயல்பு வெப்பநிலை 37 டிகிரி
செல்சியஸ்(98.6 டிகிரி ஃபாரன்ஹீட்) என்பது மருத்துவர்கள் வாக்கு. வயது, பாலினம், சூழல்
பொறுத்து ஏறி இறங்கும் வெப்பநிலையில் 1 டிகிரி
செல்சியஸ் வேறுபாடு நிச்சயம் உண்டு.
முதியவர்களின் உடல்வெப்பம் இயல்பைவிட
குறைவாகவே இருக்கும். குழந்தைகளுக்கு 36.6 -37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பெரியவர்களுக்கு
36.1 –- 37.2 டிகிரி செல்சியஸ வெப்பநிலையம், 65 வயதை தாண்டியவர்களுக்கு 36.2 டிகிரி
செல்சியஸ் வெப்பநிலையும் சராசரியாக இருக்கும்.
19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியைச்
சேர்ந்த கார்ல் வுண்டர்பிலிச், உடலின் இயல்பு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என வரையறுத்தார்.
ஆனால் பின்னாளில் வெப்பநிலை அளவு 36.8 டிகிரி செல்சியஸ் என குறைக்கப்பட்டது. தினசரி
காலையில் வெப்பம் அதிகமாக இருப்பதால் காய்ச்சல் குறைவாகவும் இரவு அதிகமாக இருக்கும்.
பெண்களின் உடல்வெப்பநிலை ஏற்றத்தாழ்வுக்கு ஹார்மோன்களும் முக்கியக்காரணம். காது(38
டிகிரி செல்சியஸ்), வாய்(37.8 டிகிரி செல்சியஸ்), அக்குள்(37.2 டிகிரி செல்சியஸ்) என
மூன்று இடங்களில் காய்ச்சல் அளவீடு எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.