நீருக்கடியில் செஸ் விளையாட்டு!



Image result for underwater chess


பிட்ஸ்!

நீச்சல்குளத்தில் செஸ்!

லண்டனில் செஸ் பிளேயர்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு விளையாடி வருகின்றனர். ஏனெனில் செஸ் மேட்சுகள் நடைபெறுவது நீச்சல் குளத்தின் நீருக்கடியில். நீரில் குதித்து ஒருவர் செஸ் போர்டில் காயை நகர்த்திய பின்பே, அடுத்தவர் நீரில் குதித்து தன் காயை நகர்த்தவேண்டும் என்பதுதான் இப்போட்டியின் விதி. டவல் எடுத்துட்டு போனா குளிச்சிட்டும் வந்துடலாம் ப்ரோ!

கல்யாணத்தில் ஒட்டகச்சிவிங்கி!

தென் ஆப்பிரிக்காவிலுள்ள அரீனா ரிசார்ட்டில் லுக் - டிரிஸ்டன் கர்ஸாகென் தம்பதிகளின் திருமணம் சொந்தம், உறவுகளுடன் கொண்டாட்டமாக நடைபெற்றது. போட்டோகிராபர் பிஸியாக கல்யாண ஜோடியை போட்டோ எடுக்க திடீரென பின்புறமாக ஒட்டகச்சிவிங்கி நுழைந்துவிட்டது.”சிறப்பு விருந்தினராக ஒட்டகச்சிவிங்கி வந்தது மகிழ்ச்சி” என ஜாலியாக அதனுடன் ஸ்பெஷல் போட்டோக்களை எடுத்திருக்கிறது லுக்- டிரிஸ்டன் தம்பதி.  

சூப்பர் சீனர்!

சீனாவின் ஜீயாங் நகரில் சீனர் ஒருவர் ஸ்கூட்டரில் சைக்கிள்களை பாசிமணிபோல கோர்த்து எடுத்துச்செல்லும் வீடியோ வைரல் ஹிட்டாகியுள்ளது. பின்னே 16 சைக்கிள்களை இரும்புக்கம்பியில் கோர்த்து தோளில் வைத்து ஸ்கூட்டரில் கொண்டு சென்றால் ஊரே வியக்காதா? பல்க் சைக்கிள்களை எடுத்துச்சென்ற மனிதர், சைக்கிள் சேவை நிறுவன பணியாளராம். ஹெர்குலஸ் அவார்டு உங்களுக்குத்தான் சார்!

மலைப்பாம்பு கடத்தல்!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் விலங்கு ஆர்வலர் வளர்ந்த பெட் பிராணியான 4 அடி நீள மலைப்பாம்பு திடீரென மிஸ்ஸிங். கண்ணில் கைவைத்து தேடிய போலீஸ், பெண்ணின் வண்டி எஞ்சினில் ரெஸ்ட் எடுத்த பாம்பை மீட்டனர். சட்டவிரோதமாக ஆபத்தான விலங்கை வளர்த்த குற்றத்திற்கான பெட் விரும்பிக்கு ரூ.21 ஆயிரத்து 924 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜெயில்ல போடுங்க சார் அவரை!