சிறப்பு ஆயுதச்சட்டத்திற்கு வயது 60!
60 ஆண்டு ராணுவச்சட்டம்!
1947 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான்
பிரிவினைக்கு பிறகு அசாம், சிக்கிம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கலவரங்கள்
உருவாயின.
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற சிறப்பு
ஆயுதச்சட்டம்(AFSPA) இந்தியா அரசால் கொண்டுவரப்பட்டது. அசாம்- நாகலாந்தில் இச்சட்டம்
1958 ஆம் ஆண்டு மே 22 அன்று குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் கையெழுத்திட சிலமாதங்களிலேயே
அமுலுக்கு வந்தது.
மணிப்பூர், அசாம் மாநிலங்களில்
ராணுவத்தினர் ஆயுதச்சட்டத்தை பயன்படுத்தி செய்த மனித உரிமைமீறல்கள் பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தின. சிறப்பு ஆயுதச்சட்டம் ராணுவத்தினரின் அத்துமீறல்களை மறைக்கும் கவசம் என்று
கூறியுள்ளது. தற்போது இச்சட்டத்தை முடக்க கூடாது என சில ராணுவ வீரர்கள் உச்சநீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்துள்ளனர். பிரிவினைவாத அமைப்புகளின் வன்முறைகளை சமாளிக்க ராணுவத்தின்
உதவி தேவை என்பதில் ஐயமில்லை. ஆனால் அதேசமயம் கட்டற்ற அதிகாரம் ஓர் அமைப்பில் குவியும்போது
பெறும் சர்வாதிகாரம் மக்களை துன்புறுத்த தொடங்குவதற்கு வரலாறு நெடுக ஆதாரங்கள் உண்டு.
தனக்கான உரிமைகளை பெற வாய்ப்பின்றி மக்கள் துப்பாக்கி முனையால் அழுத்தப்படுவது ஜனநாயகத்திற்கு
நல்லதல்ல.