எவரெஸ்ட் உயரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள்?
எவரெஸ்ட் உயரம்!
நம்முடைய உயரத்தை எளிதாக சுவற்றில்
ஸ்கேல் வரைந்து கண்டுபிடித்துவிடுகிறோம். ஆனால் பனிமலை முகடுகளை எப்படி அளவிடுகிறார்கள்?
உதாரணத்திற்கு எவரெஸ்ட்டின் உயரம் சில ஆண்டுகளில் உயருகிறது என துல்லியமாக எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?
இயற்கணித முறைகளிலிருந்து ஜிபிஎஸ்
முறையில் மலைகளின் உயரங்கள் கணக்கிடப்பட்டு வருகிறது. பொதுவாக எவரெஸ்ட்டின் உயரம்
29 ஆயிரத்து 029 அடி(8,848 மீ) என ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் சீனா, டென்மார்க்,
இத்தாலி, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கணக்கீடு பெருமளவு மாறுபட்டு இருப்பதே
உண்மை. 1992 ஆம் ஆண்டு இத்தாலி அளவுப்படி ஏழு அடி வித்தியாசத்தில் 29,022 அடி,
1999 ஆம் ஆண்டு அமெரிக்கா அளவீடுப்படி 29,035 அடி என அளவிட்டனர்.
“1934 ஆம் ஆண்டு நிகழ்ந்த தெற்கு
திபெத் மற்றும் இந்தியப்பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எவரெஸ்ட்டின் உயரம் 63
செ.மீ குறைந்துவிட்டது.” என்கிறார் கொலராடோ பௌல்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர்
ரோஜர் பில்ஹாம். ஜிபிஎஸ் முறையில் செயற்கைக்கோள் உதவியுடன் கடல்நீர் மட்ட அளவு மற்றும்
புவியீர்ப்பு விசை ஆகியவற்றின் மூலம் எவரெஸ்ட்டின் உயரம் தீர்மானிக்கப்படுகிறது. இப்பணிக்கான
செலவு ரூ. 1,79,18.675.