சூழல் திட்டங்களுக்கு மைக்ரோசாஃப்ட் உதவி!
மானியம் தரும் மைக்ரோசாஃப்ட்!
மைக்ரோசாஃப்ட்டின் AI For Earth திட்டத்தின் மூலம் உலகை மாற்றும்
சூழல் திட்டங்களுக்கு ஆசிய அளவில் 50 மில்லியன் டாலர்கள் மானியம்(16 திட்டங்கள்) அளிக்கப்பட்டு
வருகிறது. 45 நாடுகளில் 147(விவசாயம், பல்லுயிர்த்தன்மை, நீர், வெப்பமயமாதல்) சூழல்
திட்டங்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிதியளித்துவருகிறது. கீழ்காணும் திட்டங்களை மைக்ரோசாஃப்ட்
ஆதரித்துள்ளது.
டாக்டர் முனீஸ்வரன் மாரியப்பன், பெங்களூரு
பெங்களூரைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சி மற்றும் சூழலியலுக்கான
அசோகா அறக்கட்டளையைச் சேர்ந்தவர் டாக்டர் முனீஸ்வரன் மாரியப்பன். இவர், வடகிழக்கு மாநிலங்களைச்
சேர்ந்த Hoolock Gibbon to the Phayre’s Leaf Monkey உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்கவும், இருப்பிடங்களை
கண்காணிக்கவும் ஏஐ உதவியை நாடியுள்ளார்.
அங்கிதா சுக்லா, டெல்லி
லக்னோவின் சிறுநகரில் பிறந்த அங்கிதா சுக்லா, டெல்லி ஐஐடி முனைவர்
படிப்பு மாணவி. தலைநகரில் சுற்றியலையும் குரங்குகளின் எண்ணிக்கை, தடுப்பூசி, புகைப்படங்களை
அடையாளமறிய ஆப்பை உருவாக்கி குரங்கினத்தை பாதுகாக்க முயற்சித்து வருகிறார்.
அர்ச்சனா சௌத்ரி, மும்பை
மும்பையைச் சேர்ந்த கணினி அறிவியல் பட்டதாரி அர்ச்சனா சௌத்ரி,
ஸ்மார்ட் மீட்டர் மூலம் ஆற்றலை அளவிட்டு கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்தும் செயல்பாட்டில்
பேராசிரியர் ப்ரீத்தி முலேயுடன்(சிம்பயோசிஸ் தொழில்நுட்ப கழகம்)தீவிரமாக இயங்கி வருகிறார்.
டாக்டர் யோகேஷ் சிம்ஹன்,பெங்களூரு.
பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் தகவல் அறிவியல்
துறையில் துணை பேராசிரியராக உள்ள யோகேஷ் சிம்ஹன், அமெரிக்காவின் ப்ளூமிங்டன் நகரில்
கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் முறையில் திறன்
பெற்ற யோகேஷ் நகரங்களுக்கு நீர் விநியோகமுறையிலுள்ள பிரச்னைகளை தீர்க்கும்வகையில் செயல்பட்டு
வருகிறார். பெங்களூருவில் நீர் விநியோகம், தேவை, பயன்பாட்டிற்கான தொகை ஆகியவற்றை தன்
டெக் குழு மூலம் செய்து வருகிறார்.
டாக்டர் மம்தா சர்மா, ஹைதராபாத்.
டாக்டர் மம்தா, பயிர்களுக்கு பூச்சிகளால் ஏற்படும் தாக்குதல்களை
கணித்து பாதிப்புகளை குறைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். “எங்களது ஆப் மூலம்
செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி பூச்சித்தாக்குதல்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும்
முடியும்” என்கிறார் தேசிய பயிர் ஆராய்ச்சி கழகத்தைச்(ICRISAT) சேர்ந்த டாக்டர் மம்தா. இதோடு டாக்டர் ஹிமான்சு அகர்வால் தூய குடிநீர்
தொடர்பான ஆராய்ச்சிக்கு மைக்ரோசாஃப்ட்டின் நிதியுதவியைப் பெற்றுள்ளார்.
இந்த திட்டங்களின் பொதுவான தன்மை, அனைத்து திட்டங்களிலும் மைக்ரோசாஃப்டின் மென்பொருட்களை பயன்படுத்தி உள்ளனர். பல்வேறு துறைசார்ந்த தகவல்களை தனி ஊழியர்கள் இன்றி மைக்ரோசாஃப்ட் இம்முறையில் திரட்டி தகவல்தளமாக சேமிக்கவும் ்வாய்ப்புள்ளது. தற்போது மைக்ரோசாஃப்ட் செய்துள்ள மானிய உதவி என்பது நாளை அந்நிறுவனம் பெறும் லாபத்தில் சிறுபங்கு மட்டுமே.
ஆக்கம்: ச.அன்பரசு
தொகுப்பு: கெவின் டாயல்