ஸ்டார்டஅப் மந்திரம் 10-15 -








ஸ்டார்ட்அப் மந்திரம் 12!- கா.சி.வின்சென்ட்
 10
நான் ஏன் தோற்றுப்போனேன்?

ஸ்டார்ட்அப்பின் ஃபார்முலா சரிதான். வெற்றியில் கேட்காத காது, தோல்வியில் கேட்பது புதிய மாற்றம். மும்பையில் சிறியதாக சோஷியல் மீடியா ஸ்டார்ட்அப் தொடங்கியவர், வீட்டுத்தேவைகளுக்கான ஆப் ஒன்று மக்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்து நண்பர்களை இணைத்து ஸ்டார்ட்அப்பை தொடங்கினார்.

இரண்டு தவறுகள்தான் கம்பெனியே காலி.
"சேவை தொடங்கி 3 மாதத்தில் 5 மில்லியன் முதலீட்டைத் திரட்டினோம். ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.700 செலவு செய்து அவரிடமிருந்து எழுபது ரூபாயை பெற்றது கம்பெனியை வீழ்த்திவிட்டது"  என்றார் அவர். பிறகு அடுத்த 3 மாதங்களில் வாடிக்கையாளர்களுக்கு நிலையைக்கூறி மின்னஞ்சல் அனுப்பி கணக்கு வழக்கு பைசல் செய்திருக்கிறது இளைஞரின் 50 பேர் கொண்ட குழு. நிறுவனரின் அனுபவத்தை கேள்விப்பட்டு 400 பணியாளர்கள் கொண்ட கம்பெனிக்கு சிஇஓவாக செயல்படும் வாய்ப்பு தேடிவந்திருக்கிறது.

தோல்விக்கு என்ன காரணம்? "இந்தியர்கள் நம சூழலுக்கான ஐடியாவை உருவாக்குவதில்லை. ஃபிளிப்கார்ட், ஓலா, ஸ்நாப்டீல் உள்ளிட்டவை. மேற்கத்திய ஐடியாவை காப்பியடித்தால் எப்படி ஜெயிக்கமுடியும்? " கலாட்டா என்ற பத்திரிகையை டிஜிட்டலாக்க மேக்ஸ்டரை தொடங்கி ஜெயித்தோம். கேஷ் ஆன் டெலிவரி என்பது ஃப்ளிப்கார்டின் இந்திய டியா. ஆனால் பல விஷயங்களையும் உருவாக்காமல் பயனர்களாகவே இருக்கிறோம் " என்பது மேக்ஸ்டர் நிறுவன இயக்குநர் கிரிஷ் ராம்தாஸ் வாக்கு.

தோல்வி காரணங்கள்!
மார்க்கெட் தேவை - 42%
குழு பற்றாக்குறை - 23%
சரியான விலை, மோசமான பொருள் - 17-18%
வாடிக்கையாளர் சேவை மற்றும் மார்க்கெட்டிங் தோல்வி- 14%
சாதகமற்ற சூழல் - 13%

"ஸ்டார்ட்அப், தோல்விகளையும் கொண்டதுதான். நாங்கள் தொடங்கிய IT&T நிறுவனத்தை ஐகேட் நிறுவனத்திடம் 1990 ஆம் ஆண்டு விற்றோம். Bluestone, Big basket ஆகிய இரு ஸ்டார்ட்அப்பில்களிலும் உழைப்பதற்கு அவை தோற்றுவிடக்கூடாது என்ற பயம்தான் காரணம்" என்கிறார் தொழில்முனைவோரான கணேஷ். 13 தொழில்களை நடத்திவரும் கணேஷ்-மீனா தம்பதியினர் ட்யூடர் விஸ்டா என்ற நிறுவனத்தை பியர்சன் நிறுவனத்திடம் 200 மில்லியன் டாலர்களுக்கு விற்றனர். உணர்ச்சியைவிட நிறுவன நன்மையே முக்கியம்.
                                       


11


ஸ்டார்ட்அப் மந்திரம் 11 - கா.சி.வின்சென்ட்

சைக்கிளில் பிஸினஸ் செய்யலாம்!

சீனாவில் உருவான ஸ்டார்ட்அப்பான Mobike தற்போது பனிரெண்டு நாடுகளில் 200 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. வருமான வாய்ப்பு எப்படி? "மெட்ரோ ஸ்டேஷன்கள், பஸ் நிலையங்கள், மால்கள், அலுவலங்கள் ஆகியவற்றிலுள்ள சைக்கிள்கள்களை வாடகை செலுத்தி நீங்கள் அதனை பயன்படுத்தலாம்" என்கிறார் இதன் இயக்குநர் விபர் ஜெயின். ஓலாவின் பெடல், ஜூம் காரின்(பெங்களூரு) பெடல், மொபிசை ஆகிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் சைக்கிள் சேவையை குருகிராம், கான்பூர், சென்னை, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் வழங்கி வருகின்றன.

தற்போது இந்தியாவில் 10 சைக்கிள் ஸ்டார்ட்அப்கள் இயங்கி வருகின்றன."அமெரிக்கா, சீனாவைத் தவிர்த்து வேறெங்கும் சைக்கிள்களுக்கான பாதை அமைக்கப்படவில்லை. அப்படி அமைக்கப்படும்போது மக்களும் சைக்கிளை தேர்ந்தெடுப்பார்கள்" என்பது ஜூம் கார் இயக்குநரான கிரேக் மொரானின் கருத்து. இப்போது வெற்றிபெற்ற சில இந்திய ஸ்டார்ட்அப்களை பார்ப்போம்.

Innozz technology
உங்கள் போனிலிருந்து இன்னோஸ் தேடுபொறிக்கு குறிப்பிட்ட வார்த்தையைத் தேட குறுஞ்செய்தி அனுப்பினால் அது குறித்து 480 வார்த்தையில் பதில் வரும். ன்டர்நெட் இன்றியும் இதனை செய்யலாம் என்பதுதான் இன்னோஸ் டெக்னாலஜியின் புதுமை. கேரளா மாணவர்களின் கண்டுபிடிப்பு.
Inmobi
மொபைலில் விளம்பரம்தான் கான்செப்ட். வெளிநாடுகளிலும் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 

barefoot movement
ராய், 1972 ஆம் ஆண்டு தொடங்கிய கல்வி ஸ்டார்ட்அப் இது. கிராமங்களில் வசிக்கும் கல்வியறிவற்ற மக்களுக்கு கல்வி, உணவு, குடிநீர், வேலைவாய்ப்பு ஆகியவற்றை அளிப்பதை அடிப்படையாக கொண்டு ஹிட்டான திட்டம் இது.
கல்லூரியில் மாணவர்களின் ஐடியாவை ஓகே செய்து உடனே கம்பெனிகள் ஆஃபர் லெட்டர் கொடுத்தாலும் வேலை கொடுப்பது கடினமாகி வருகிறது. எனவே ஐஐடி கடந்த ஓராண்டாக(2016) மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தரத்தவறிய () தாமதப்படுத்திய 30 நிறுவனங்களை கருப்புபட்டியலில் வைத்திருந்தது. இதில் ஸோமாடோ, குரோஃபர்ஸ் ஆகியவையும் உள்ளடங்கும். "இந்த உயர்கல்வி நிறுவனங்களில் அதிக சம்பள நிறுவனங்களுக்கு முன்னுரிமையும், பின்னரே சிறிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு தருவதும் சரியான அணுகுமுறையல்ல." என்கிறார் பேடிஎம்மின் நிறுவனர் விஜய்சேகர் சர்மா. தற்போது நிறுவனங்கள் பலவும் ஹேக்கத்தான் நிகழ்வுகளில் திறமையான மூளைகளை தேடத்தொடங்கியுள்ளன.
                                  

12


ஸ்டார்ட்அப் மந்திரம் 12
கா.சி.வின்சென்ட்
சீனா வென்றது எப்படி?
இந்தியர்களின் ஸ்டார்ட்அப்கள் ட்ரில்லியன் டாலர்களை தொட 10 ஆண்டுகள் தேவை என்கிறது ஆய்வு. ஆனால் சீனாவில் அலிபாபா இ-தளம் விற்பனையில் சக்கைபோடுபோட்டு ரூ.15 ஆயிரத்து 827 கோடியை  சம்பாதித்திருக்கிறது. மேலும் அலிபாபாவின் கடந்தாண்டு விற்பனை வருமானம் 50 பில்லியன் டாலர்கள்.
உள்ளூர் சந்தை
சீனாவை ஜெயிக்க முக்கிய காரணம், உள்ளூர் சந்தை. இந்தியாவின் விளம்பரச்சந்தை 9.5 பில்லியன் என்றால் சீனாவினுடையது 75 பில்லியன். டிஜிட்டல் விளம்பர மார்க்கெட் மதிப்பு 35 பில்லியன். சீனா பிறநாட்டு நிறுவனங்களை காப்பியடித்து உள்நாட்டு கம்பெனிகளை உருவாக்கியது முக்கியச்செயல்பாடு. கூகுளுக்கு இணையாபைடு இதற்கு உதாரணம். "சீனா வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடை போட்டு உள்ளூர் நிறுவனங்களின் மூலம் போட்டியிடுகிறது. ஆனால் இந்தியர்கள் நேரடியாக அயல்கம்பெனிகளுடன் போட்டியிடுவதால் வெற்றிவாய்ப்பு குறைவாக உள்ளது" என்கிறார் முதலீட்டாளர் சபர்வால்.

உலகிற்காக தயாரிப்பு

இந்தியா, பெரும் நிறுவனங்களுடன் போட்டியிடத் தொடங்கியதில் பிளஸ்ஸும் உண்டு, மைனஸும் உண்டு. நாம் யோசிக்கும் ஐடியாவும் அந்தளவு இருக்கவேண்டும் என்பது பலமும்தான் பலவீனமும்தான். "சீனா உள்நாட்டை குறிவைக்க, இந்தியா உலகை குறிவைத்துள்ளது. ஃப்ரெஷ் டெஸ்க், மந்தன், கேபிலரி டெக்னாலஜிஸ் ஆகியவை இதற்கு உதாரணம்" என்கிறார் கூகுளின் கிழக்காசிய துணைத்தலைவர் ஆனந்தன். இதில் சீனா மாடல் என்பதை இந்தியாவுக்கும், இஸ்ரேல் மாடல் என்பதை உலகிற்கு எனவும் பிரித்து புரிந்து கொள்ளலாம்.

கூட்டுறவு முக்கியம்!

உலகளவில் ஸ்டார்ட்அப் ஐடியாவுக்கு முதலீடு தேடும்போது, உள்நாட்டிலுள்ள கம்பெனிகளோடு கூட்டு சேருவது உள்ளூர் சந்தையில் காலூன்ற எளிய வழி. பேடிஎம்மில் அலிபாபாவின் முதலீடு - சிறிய உதாரணம்.
அப்டேட் அவசியம்!
மருத்துவமோ, டெக் நிறுவனங்களோ தொடர்ந்து அப்டேட் அவசியம். புதுமைத்திறன்களோடு பிரச்னைகளை தீர்க்க முடியாதபோது, ஸ்டார்ட்அப்கள் வருவது கஷ்டம். ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்டார்ட்அப்களில் குவிவதற்கு காரணம் ஜப்பான் புதிய ஐடியாக்களில் பின்தங்கியுள்ளதுதான்.
பாக்ஸ் ஏஐ ஐடியாவை உருவாக்கிய அஜய் காஷ்யப் "நாங்கள் எங்கள் ஐடியாவை முதலில் பல்வேறு முதலீட்டாளர்களிடம் சொன்னபோது யாரும் அதனை ஆதரிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் விற்பனைக்கான பொருளை எங்களிடம் எதிர்பார்த்தார்கள்." என்கிறார் அஜய்.  
                                   
13


ஸ்டார்ட்அப் மந்திரம்- 13

தன் அறை நண்பர் அங்கூர் சரவாகியுடன் இணைந்து பாக்ஸ் ஏஐ நிறுவனத்தை உருவாக்கியுள்ளார் அஜய் காஷ்யப். -காமர்ஸ் தளங்களுக்கான வாடிக்கையாளர் டேட்டாவை பெற்றுத்தருவதே நிறுவனத்தின் பணி. குருகிராமில் பத்து மாத உழைப்புக்கு பிறகு பாக்ஸ் ஏஐ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக ஜபாங், டாடா கிளிக் ஆகியவை இணைந்துள்ளன. எனவே ஐடியா மீது நம்பிக்கை வைத்து முதலீட்டாளர்களை தேடினால் அட்டகாச வெற்றி நிச்சயம்.

வாடிக்கையாளர்களை வளைப்பது எப்படி?

Every Person in your Company is a vector. Your Progress is Determined by the sum of all vectors -Elon musk

ஸ்டார்ட்அப்பில் திறமையான ஆட்கள் இருந்தாலும் ஒரே இலக்கை நோக்கி உற்சாகமாக சென்றால் மட்டுமே விக்டரி சாத்தியம் என்பது தொழில்துறை சூப்பர்ஸ்டார் எலன் மஸ்க் வாக்கு. இதுபோல தளராத டன் கணக்கில் தன்னம்பிக்கை பெருகும் விஷயங்கள் https://thinkgrowth.org/ தளத்தில் கிடைக்கும். அமெரிக்காவில் ஸ்டார்ட்அப் முயற்சிகள் அதிகம் நடைபெறும் போட்டியில் சியாட்டில், வாஷிங்டன், அட்லாண்டா, மியாமி, டென்வர், லாஸ் ஏஞ்சல்ஸ் சான் ஃபிரான்சிஸ்கோ ஆகிய நகரங்கள் மோதிய போட்டியில் நியூயார்க் நகரமே (197.3) உச்ச புள்ளிகளைப் பெற்று வென்றிருக்கிறது.

வாடிக்கையாளர்களின் தேவை.

ஒரு நிறுவனம் தன் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு முக்கியமான விஷயம், அவர்களின் தேவை என்ன என்பதை ஆபீசைவிட்டு வெளியே வந்து அறிவது. சர்வே, ரேட்டிங் என நிறுவனங்கள் கூறி தகவல்களை பெற்றாலும் அவை உறுதியானவை அல்ல. உதாரணம். அமேசான். இணையத்தில் நூல் விற்பனையாளராக தன் வாழ்வை தொடங்கிய அமேசான் இன்று நுழையாத தொழில்களே கிடையாது. சீக்ரெட் ரகசியம்? டேட்டா. உங்கள் ஸ்மார்ட்போனை  உசுப்பி திரையைப் பாருங்கள். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஓஎஸ்ஸின் இன்பில்டாகவே அமேசான் ஆப் இருக்கும். இதுபோதாதா உங்களைப் பற்றி அறிய?

கழுகுப்பார்வையில் பாருங்கள்!

சர்வே, ஆய்வுகள் கடந்தகாலத்தை மூளையில் சுற்றும். ஆனால் ஸ்டார்ட்அப் புத்திசாலிகள் எதிர்காலத்தை துல்லியமாக கணித்தால் வெல்லலாம். சமூகவலைதளங்கள், விற்பனை, போட்டியாளர்களின் விவரங்கள், சர்வே இதெல்லாம் ஸ்டார்ட்அப் முயற்சிக்கான பேக்அப்புகள் என்பதில் டவுட்டே வேண்டாம்.
                                  

14 


ஸ்டார்ட்அப் மந்திரம் 14

கா.சி.வின்சென்ட்

எதிர்காலம் தலைவனின் கையில்!

சின்ன உதாரணம். அனைவரும் கம்ப்யூட்டர் விற்றுக்கொண்டிருந்தபோதே, இசை மீதான காதலில் எடை குறைவான ஐபாடைக் கண்டுபிடித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இறுதியில் அவர் உருவாக்கிய நிறுவனத்தில் அவரை தூக்கியெறிந்தபோதும் நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை நடத்தியதோடு ஐபோன் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் இருந்தார். பின் மீண்டும் நிறுவனத்திற்கு வந்து சரிந்து கிடந்த ஆப்பிளை உயர்த்தினார்.
இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது, கணினி கம்பெனியான ஆப்பிள் எலக்ட்ரானிக் பொருட்களை காலத்திற்கேற்ப தயாரிக்க தயங்கவில்லை. விண்டோஸைத் தாண்டி இன்று ஆப்பிள் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமாக நிலைத்திருக்க ஸ்டீவ் ஜாப்ஸின் லேட்டரல் சிந்தனையும் காரணம்.
2016 ஆம் ஆண்டு ஓலா,பேடிஎம், குயிக்கர் ஆகிய ஸ்டார்ட்அப்கள் 1 பில்லியன் கிளப்பில் வலதுகால் வைத்து நுழைந்தன. இதில் மெசெஜ் சேவையளித்த ஹைக், கல்வி சேவைக்கான பைஜூ ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஐடியா சூப்பர் என்றாலும் நிதி திரட்டுவதில் இன்னும் வேகம் போதவில்லை. முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களை பார்ப்போம்.

பிக் பாஸ்கெட்

2011 ஆம் ஆண்டில் தொடங்கி சூப்பர்மார்க்கெட் குரோசரி சப்ளைஸ் பி.லிட் நடத்தும் ஸ்டார்ட்அப் நிறுவன வெற்றியைக் கவனித்த அமேஸான், ஃபிளிப்கார்ட்டும் ஆன்லைனில் காய்கறி விற்பனையை தொடங்கவிருக்கின்றன. அலிபாபாவிடம் 200 மில்லியன் முதலீட்டை தொடங்கிய 6 ஆண்டுகளில் பெற்றுவிட்ட இந்நிறுவனத்திற்கு 30 நகரங்களில் சேவை உண்டு. மதிப்பு 850 மில்லியன் டாலர்கள்.

பாலிசி பஜார்

ஈடெக்ஆசஸ்(etechaces) மார்க்கெட்டிங் அண்ட் கன்சல்டிங் பி.லிட் நிறுவனம் இந்தியாவின் நம்பர் 1 இணைய காப்பீடு நிறுவனம். சாஃப்ட்பேங்க் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மேல் முதலீடு செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு லாபம் பார்த்த இணைய ஸ்டார்ட்அப்களில் பாலிசிபஜார் முக்கியமான ஒன்று.

புக்மைஷோ
2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 500 மில்லியன் டாலர்கள். நெட்வொர்க் 18 உள்ளிட்ட நிறுவனங்கள் டிக்கெட் புக்கிங் நிறுவனமான புக்மைஷோ மீது முதலீடு செய்துள்ளன.
                                     


ஸ்டார்ட்அப் மந்திரம் 15
கா.சி.வின்சென்ட்

உழைப்பும் நன்றியும்!

புக்மைஷோ உள்ளிட்ட நிறுவனங்களோடு 800 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட ஸ்விக்கி, 930 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஓயோ ரூம்ஸ் ஆகியவையும் ஸ்டார்ட்அப்களில் முன்னிலை வகிக்கின்றன.
தொழில்திறன்களோடு ஆளுமையை வளர்க்க சில குறிப்பிட்ட குணங்களை வளர்த்துக்கொள்வது அவசியம். முதலில் பாராட்டுக்களை ஏற்க பழகுவது.

நன்றியை ஏற்போம்!

உலகில் எழுபது சதவிகிதம் பேர், தங்களை பாராட்டும்போது சங்கடமாக உணர்கிறார்கள். ஆனால் பாராட்டும் வார்த்தைகள் மேலதிகாரிகளிடமிருந்து வந்தால் நன்றி சொல்லி மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். தவறில்லை.

பேச்சு முக்கியம்!
லட்சியத்தை ஊழியர்கள் மனதில் பதியவைக்க சர்க்குலர் அனுப்பினால் போதாது. அவர்களின் மனதில் பதியவைக்கும்படி சுருக் நறுக்கென பேசுவது முக்கியம். தகவல்களை மனதில் பதியவைக்க எக்ஸல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
விமர்சனங்கள் அவசியம்
நமது முடிவுகளைப் பற்றிய விமர்சனங்களை கேட்கும் பொறுமை, தைரியம் இல்லாவிட்டால் நாம் பணியாளர்களின் வேலை பற்றிய மதிப்பீட்டையும் முன்வைப்பதில் தடுமாறவேண்டியிருக்கும்.

மரபிலிருந்து புதுமைக்கு!

பிறநாடுகளை விட இந்தியர்கள் ஸ்டார்ட்அப் தொடங்கி வெற்றிகாண மார்க்கெட் போட்டியுடன் குடும்ப உறுப்பினர்களின் நம்பிக்கையையும் வெல்லவேண்டிய இரட்டை சவால் உள்ளது. மார்வாரி குடும்பத்தைச் சேர்ந்த நிதிஷ் மிட்டர்செய்ன் ஏழு வயதிலேயே கேமுக்கு கோடிங் எழுதிய டேலன்ட் புலி. ஆனால் குடும்பத்தினர் ஜவுளி பிஸினஸில் நிதிஷை இறக்க திட்டமிட்டனர். ஆனால் நிதிஷ் அதில் பெரிய ஆர்வம் காட்டாமல், கல்லூரி படிப்பு முடிந்ததும் மும்பையில் நஸாரா என்ற தன் கேம் கம்பெனியை தொடங்கினார். பதினேழு ஆண்டுகள் பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு இன்று சோட்டா பீம், கிரிக்கெட் ஆகியவற்றை மொபைலில் தயாரித்து அளிக்கும் புகழ்பெற்ற கம்பெனியாக நஸாரா வளர்ந்துள்ளது இன்று தன் வெற்றிக்காக 3 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றுள்ளது. பல்வேறு கம்பெனிகள் உடனே ஐபிஓவில் இறங்கி முதலீட்டை பெறுவதை சிறப்பானதாக நினைப்பதில்லை. "வெளி முதலீடுகள் ஸ்டெராய்டுகள் போல. இவை அதிகமாகும்போது பிஸினஸ் சிறக்காது" என்கிறார் CRMnext என்ற ஸ்டார்ட்அப் நிறுவன இயக்குநரான நிஷாந்த்சிங்.