காதை கடித்த போதை!




Image result for dog



திறமை இல்லாததால் வேலை இல்லை!

அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் துறையிலுள்ள டெலிகாம் மெசஞ்சர் பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடக்க கல்வி தகுதி மட்டுமே தேவையான இப்பணிக்கு, 3,700 ஆராய்ச்சி மாணவர்கள், 28 ஆயிரம் முதுகலை பட்டதாரிகள், 58 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இது உ.பியின் எதார்த்த நிலை.
நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று கூறினீர்களே? என லக்னோ நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அரசு துறைகளிலுள்ள ஏராளமான வேலைவாய்ப்புகளுக்கு தகுதியான பட்டதாரிகள் கிடைப்பதில்லை” என்று தில்லாக  கூறினார். “உ.பியில் அரசின் செயலற்ற தன்மையை முதல்வர் மறைக்க பார்க்கிறார். படித்த இளைஞர்கள் பலரும் அரசின் எதிர்மறை போக்கினால் அவமானப்படுத்தப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர்” என்கிறார் காங்கிரஸ் தலைவரான எஸ்.ஜே.எஸ். மாக்கர். அரசு தேர்வுகளில் நடைபெறும் முறைகேடான கேள்வித்தாள் வெளியீடுகள் உ.பி அரசின் திறனற்ற செயல்பாடுகளை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது.



2


‘அந்த’ இடத்தில் ஆபத்து!

சீனாவின் ஹைனன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சான்யா கடல் பகுதியில் ஜாலியாக நீச்சலடிக்க நினைத்தார். ஆனால் மீன் ஒன்று உள்ளே புகுந்து அவரது பிளானைக்கெடுத்து மன உளைச்சலையும் தந்துவிட்டது.
சீனாவின் தெற்குப்பகுதியிலுள்ள சான்யா கடற்கரையில் இளைஞர் ஒருவர் தன் சகாக்களுடன்  நீச்சலடிக்க சென்றார். ஜாலியாக அலையோடி விளையாடி குளித்தார். திடீரென அந்த இடத்தில் சுருக் கென வலி, எரிச்சல். குனிந்து பார்த்தால் சுறா வகையைச் சேர்ந்த ஸ்டின்கிரே வகை மீன் ஆண்குறியில் மிகச்சரியாக ஹேங்கரில் சட்டைபோல மாட்டியிருந்தது. வலிபொறுக்க முடியாமல் புத்தர் முதல் கர்த்தர் வரை உதவிக்கு அழைத்தவரை தீயணைப்பு படை வீரர்கள் ஸ்பாட்டிற்கு வந்து காப்பாற்றினர். இளைஞர் வேதனையில் மணலில் புரண்டு தவிக்கும் வேதனைப் போராட்ட வீடியோவையும் உலகளவில் ஐந்து மில்லியன் பேர் பார்த்து லைக் செய்துள்ளனர். இளைஞர் காப்பாற்றப்பட்டாலும் இறுதியாக மீன் செத்துவிட்டதாம்.  


3

காதை கடித்த போதை!


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி உச்சபோதையில் நாயின் காதை கடித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

மேற்குவங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்திலுள்ள உத்தர்புராவைச் சேர்ந்தவர் சம்புநாத் தலி. கட்டுமானத் தொழிலாளியான இவர், வேலை முடிந்ததும் டாஸ்மாக்கில் தொண்டை வரை மதுவை இறக்கிவிட்டு நடைபாதையோரம் தூங்குவது வழக்கம். தூங்கும்வரை பொழுதுபோக்கு வேண்டுமே? அக்கம்பக்கத்து ஆட்களை வம்புக்கு இழுத்து ஜாலி செய்வது சம்புநாத் பாணி.  அன்றும் அப்படித்தான் சம்பு, மதுபான கிறக்கத்தில் சலம்ப, தூங்க முடியாத தெருநாய்கள் பொறுக்கமுடியாமல் ஊளையிட்டு ஆட்சேபித்தன. ரத்த அழுத்தம் எகிறிப்போகுமளவு டென்ஷனான சம்புநாத், அதிரடியாக தன்னருகில் இருந்த நாயின் காதை கடித்து துப்பினார். கடிபட்ட நாய் வேதனை பொறுக்காமல் கூக்குரலிட அக்கம்பக்கத்து மக்கள் ஓடோடி வந்து சம்புவின் செவுளில் இரண்டு வைத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். நாய் ரிவென்ஞ் எடுத்தா என்னவாகும் சம்பு?