பெட்ரோல் டீசலுக்கு மாற்று எத்தனால் மட்டுமே!
எத்தனால் தோல்வி ஏன்?
பெட்ரோல், டீசலில் எத்தனால் கலப்பது
குறித்து இந்திய பிரதமர் மோடி, போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின்கட்கரி பல்வேறு நிகழ்களில்
பேசியுள்ளனர். தற்போது பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு 2-3%. 2030 ஆம் ஆண்டுக்குள்
எத்தனால் அளவு 20% ஆகும்.
பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய
நாடுகள் எத்தனால் தயாரிப்பதில் முன்னிலை வகிக்கின்றன. எத்தனாலின் மூலமான கரும்பை விளைவிக்க
அதிக நீர் தேவை. அமெரிக்கா, பிரேசிலை விட அதிகமாக நிலத்தடிநீர் வளத்தை இந்தியா பயன்படுத்தி
வருகிறது. தற்போது இந்தியாவிலுள்ள நீரில் அளவு 1,446 பில்லியன் க்யூபிக் மீட்டர்(BCM).
நீர் மட்டுமல்ல கரும்பு பயிரிடும் பரப்பின் அளவும் 3% என குறைவுதான். பிரேசிலின் பெட்ரோல்
– எத்தனால் கலப்பு 45-50%. இந்தியா 0.701% நீரைப் பயன்படுத்தி 20% கலப்பை செய்துள்ளது.
இதை எட்டவே நாம் பத்தில் ஒரு பங்கு நிலத்தில் கரும்பு பயிரிடும் தேவையுள்ளது. “தொழில்நுட்பம்
உதவினால் எத்தனாலை நாம் பயன்படுத்தலாம்” என்கிறார் அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த
ரம்யா நடராஜன்.