கொலின் மெக்கன்சிக்கு உதவிய தெலுங்கு பிராமணர்!





Related image




மாஸ்டர் பணியாளர்!

இந்தியாவின் முதல் நில அளவைத்துறை தலைவர் கோலின் மெக்கன்சி என்பது நமக்கு தெரியும். அவரின் பணிகளை அத்தனையும் பம்பரமாக நினைவில் வைத்து ஆட்களை வேலைவாங்கியது தெலுங்கு பிராமணரான காவெலி வெங்கட போரியா என்பவர்.

மெக்கன்சியுடன் 1796-1803 காலகட்டம் வரையில் பணியாற்றியவர், 26 வயதில் இறந்துபோனார். கவர்னர் வெல்லெஸ்லி மூலம் இயற்பியல் வல்லுநரான மெக்கன்சி, ஃபிரான்சிஸ் புச்சனன், பெஞ்சமின் ஹெய்னே உள்ளிட்ட மூவர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் சமூகம், சிற்பங்கள் தொடர்பாக மெக்கன்சி தொகுத்த தகவல்கள் கிழக்கிந்தியக் கம்பெனியை கவரவே அவர் இந்தியாவின் முதல் நில அளவைத்துறை தலைவரானார். போரியா, பதினாறு வயதில் ஆங்கிலேய அரசில் எழுத்தரானார். மெக்கன்சிக்கு உதவியாளரான போரியா, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, பெர்சியன், ஆங்கிலம், இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். பல்வேறு மொழிகளிலுள்ள இலக்கியங்களையும அறிந்தவர், இந்து, ஜெயின் கோவில்களையும் சிற்பங்களையும் சிறப்பாக பதிவு செய்தார். போரியா இறந்தபின் இவரது பணியை இவரது சகோதரரான காவெலி வெங்கட ராமஸ்வாமி ஏற்றுச்செய்தார். பத்தாண்டுகளில் நிறைவான மைசூர் ஆய்வு இதில் குறிப்பிடத்தக்கது.     

பிரபலமான இடுகைகள்