மறுவாழ்வு மறுக்கப்படும் அகதிகள்!
மறுவாழ்வு கனவு!
லெபனானில் வாழ்ந்து வரும் பத்து
லட்சம் சிரியா அகதிகள் மறுகுடியமர்வுக்காக அரசின் உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அடையாள அட்டை இல்லாதவர்கள் லெபனான் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது
தொடர்கதையாகிவருகிறது. ஐ.நா சபையால் வழங்கப்படும் ரேஷன் உணவுகளும்(ரூ.12,429/ குடும்பத்திற்கு)
நிதிப்பற்றாக்குறையால் குறைந்துவிட்டன.
அல் ரிஹானியா முகாமிலுள்ள சில
குடும்பங்களுக்கு பதினெட்டு மாதங்களுக்கு பிறகு ஐ.நா சபை மூலம் நேர்காணல் நடைபெற்றது.
பல மாதங்களாக எப்பதிலும் இல்லை. பின்னர் திடீரென உங்கள் மனுவை பிரான்ஸ் நிராகரித்துவிட்டது
என ஐ.நா அதிகாரிகள் கூறிவிட்டனர். ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு மறுகுடியமர்வு
வாய்ப்புகள் இருந்தாலும் அவை எளிதாக நிறைவேறுவதாக இல்லை என்பதே மக்களின் வருத்தம்.
ஆஸ்திரேலியாவில் சிரியாவைச் சேர்ந்த ஒருவரை குடியமர்த்த 50 ஆயிரம் டாலர்கள் தேவை. அகதிகள்
முகாமில் உள்ள பலருக்கும் நம்பிக்கையூட்டி பின்னர் அதனை ஐ.நா அதிகாரிகள் தகர்த்து வருவது
விரக்தியூட்டியுள்ளது. எதிர்காலம் என்னவென்று தெரியாமல் தடுமாறுபவர்களுக்கு மன உளைச்சல்
தருவது நியாயமா?