க்வாட்காப்டரில் சோலார்!
க்வாட்காப்டர்!
சிங்கப்பூரைச் சேர்ந்த தேசிய
பல்கலைக்கழக மாணவர்கள், கார்பன் பைபரில் செயத க்வாட்காப்டரை உருவாக்கி
சாதித்துள்ளனர்.
முதலில் உருவாகப்பட்ட
க்வாட்காப்டருக்கு நிலத்திலுள்ள சோலார் பேனல்கள் மூலம் மின்னாற்றல்
உருவாக்கப்பட்டது. தற்போது சோலார் பேனல்கள் க்வாட்காப்டர் விமானத்தில்்
பொருத்தப்பட்டுவிட்டன. 148 சிலிகான் செல்களைக் கொண்ட சோலார் பேனலுடன் சிறிய
க்வாட்காப்டரின் எடை 2.6 கி.கி. 2012 ஆம் ஆண்டு பேராசிரியர் ஆரோன் டானர், எட்டு
மாணவர்களுடன் தொடங்கிய திட்டம் இது. ரிமோட் மூலம் பத்து மீட்டர் தொலைவுக்கு பறக்கும்
சக்தி கொண்ட சிறிய ட்ரோனில் ஜிபிஎஸ் வசதியும் உண்டு. பேரிடர்காலங்களிலும்
புகைப்படம் எடுக்கவும் இதனை பயன்படுத்தலாம் என்கிறது ஆராய்ச்சியாளர்கள் குழு. இதற்கு
முன்னதாகவே லண்டனைச் சேர்ந்த குயின்மேரி பல்கலைக்கழக மாணவர்கள் க்வாட்காப்டரைப்
போல ட்ரோனை கண்டுபிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.