உலகம் பார்த்தது இதைத்தான்!





Image result for world news



உலகச்சுற்றுலா!

இழப்பு!
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள 200 ஆம் ஆண்டு தொன்மையான மியூசியம் தீவிபத்திற்குள்ளானது. 20 மில்லியனிற்கும் மேற்பட்ட பொருட்கள் அழிந்திருக்கலாம் என நம்பபடுகிறது.  பிரேசிலில் மக்களுக்கு சோகமான தினம். கணக்கிடமுடியாத இழப்பு என வருந்தியுள்ளார் அதிபர் மைக்கேல் டெமர்.

கைது!
மியான்மர் நீதிமன்றம் ராய்ட்டர் செய்தியாளர்களான வா லோன், கியா சோ ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையை விதித்துள்ளது. ரோஹிங்கயா முஸ்லீம்கள் குறித்த ஆவணங்களை உலகிற்கு சொன்னதற்காக இத்தண்டனை. “நாங்கள் எத்தவறையும் செய்யவில்லை என்பதால் பயமில்லை” என்கிறார் தண்டனை பெற்ற பத்திரிகையாளர் லோன்.

நிதி கட்!
அமெரிக்கா, தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு அதற்கு வழங்கிவந்த 300 மில்லியன் நிதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் சரிவர செயல்படாததால் அதிரடி முடிவெடுத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்க செயலர் பாம்பியோ தடை குறித்து புதிய பிரதமர் இம்ரான்கானிடம் பேசவும் வாய்ப்புள்ளது.

தாக்குதல்!
க்யூபாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒலி அலைகள் தாக்குதல் இருப்பதாக புகார் கிளம்பியுள்ளது. அதிகாரிகளுக்கு குமட்டல், தலைச்சுற்று, காதில் ஒலி ஆகிய பிரச்னைகள் ஏற்பட வைரஸா, ஒலி அலைகள் தாக்குதலாக குழம்பியுள்ளனர்.


பிரபலமான இடுகைகள்