இஎம்எஸ் (1909-1998)
இஎம்எஸ் (1909-1998)
கேரளாவின் மலப்புரத்தில் பிறந்த மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சியை தென்னிந்தியாவில் பெயர் தெரிய வைத்த மனிதர், எலம்குலம் மணக்கால் சங்கரன் நம்பூதிரிபாடு. கேரளாவின் முதல் முதலமைச்சராக பதவியேற்ற ஆளுமை. பரமேஸ்வரன் நம்பூதிரிபாடு, விஷ்ணுதாதா அந்தர்ஜனம் தம்பதிக்கு நான்காவது மகனாக பிறந்தவர் கல்வி கற்றது திருச்சியில்.
இந்து அடிப்படைவாதி என காந்தியை விமர்சித்த இஎம்எஸ், தன் இளமையிலேயே ரிக்வேதத்தை கரைத்து குடித்து மூளையின் நியூரான்களில் ஏற்றிக்கொண்ட படிப்பாளி. கிலாபத் இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் ஆகியவற்றில் அர்ப்பணிப்போடு கலந்துகொண்டவருக்கு பிடித்த இதழ், மாத்ருபூமி.
1921 ஆம் ஆண்டு மாப்ளா கலக நிகழ்வுகள் ஏற்பட்டபோது இஎம்எஸ்ஸின் வீடு அப்பகுதியை ஒட்டியிருந்ததால் அங்கிருந்து வெளியேறும் சூழல் உருவானது. சட்டமறுப்பு இயக்கத்தை விட கிலாபத் இயக்கம் கேரளாவில் முன்னிலை பெற்றதற்கு காரணம், முஸ்லீம்கள் எண்ணிக்கைதான். இதனால் அவர்களுக்கு எதிரான எண்ணம் உயர்ஜாதி இந்துகளிடம் உருவானது. பின்னர் இது கலவரமாக வெடித்தது.
தான் இறக்கும்வரை முஸ்லீம்களின் மாப்ளா கலகம் இந்து நிலவுடையாளர்கள் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான செயல்பாடு என்பதை இஎம்எஸ் ஏற்கவில்லை. இந்து மற்றும் முஸ்லீம்களை இந்த நிகழ்வு பிரித்துவிட்டதாக உறுதியாக நம்பினார் இஎம்எஸ். ஆர்ய சமாஜத்தின் வருகை, இந்திமொழி பரவல் இனக்குழுக்களிடையேயான பிரிவினையை அதிகரித்தது.
1927 ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்து தன் அரசியல் வாழ்வை தொடங்கினார். பாலக்காட்டிலிருந்த ஆர்ய சமாஜத்தில் இந்தி மொழியை கற்றார். சோசலிஸ்டாக மாறியவர், காதி உடுத்தி குருவாயூர் சத்யகிரஹாவில் பங்கேற்றார். கோகலே, திலகர், காந்தி, நேரு ஆகியோரை தன் முன்மாதிரியாக நினைத்தவர், ஹரோல்ட் லஸ்கி, ஷா, ட்ராட்ஸ்கி ஆகியோரையும் பின்பற்றினார். 1936 ஆம் ஆண்டு இஎம்எஸ், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அசலான காங்கிரஸ் சோசலிஸ்ட், ஜேபி நாராயணின் கருத்தியலுக்கு நெருக்கமானவன் என இஎம்எஸ் சுருக்கமாக தன்னைப்பற்றி கூறுவது வழக்கம்.
தமிழில்: ச.அன்பரசு
நன்றி: பவுன்டைன் இங்க்