கூகுளுக்கு ஹேப்பி பர்த்டே!



Image result for google birthday surprise spinner




கூகுளுக்கு வயசு 20!

இன்டர்நெட் வந்தவுடன் திரையில் தோன்றிய பல்வேறு இணையதளங்களை பற்றி அறிய மக்கள் விரும்பினர். அவர்களுக்காக இணையதளங்களை பட்டியலிட்டு கொடுக்க ஸ்டான்ஃபோர்டு மாணவர்களால் 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உருவானதுதான் கூகுள்.  
இணையதளங்களை இயக்கும் சீக்ரெட் சாஸ் என்று குறிப்பிடப்பட்ட அல்காரிதங்களை கையில் வைத்திருந்த லைகோஸ், யாஹூ ஆகிய நிறுவனங்களோடு கூகுள் போரிட வேண்டியிருந்தது.  தேடுதல் பக்கத்தில் ஒரு செவ்வக பாக்ஸ், சர்ச் என்ற சொல் மட்டுமே. ஐயம் ஃபீலிங் லக்கி என்பதை கிளிக்கினீர்கள் என்றால் வைரல் தளங்களை உடனே பார்க்கலாம் என்று உருவாக்கிய கூகுளின் அல்காரிதம் செம ஹிட். பங்குச்சந்தையில் 2004 ஆம் ஆண்டு ஆக.9 அன்று(பங்கு விலை) காலடி எடுத்து வைத்தது. வரைபடங்கள், தானியங்கி கார், செயற்கை நுண்ணறிவு, நிதிச்சேவை, சமூகவலைதளங்கள், ஸ்மார்ட்போன் ஓஎஸ், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் என கூகுள் கைவைக்காத துறைகளே கிடையாது. அமெரிக்கா அரசுக்கு உதவும் ஆராய்ச்சிகள், சீனாவில் தணிக்கைக்கு உட்பட்ட சேவை என அந்நிறுவனத்தினரே எதிர்க்கும் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிற கூகுள், ஆல்பபெட் என்ற நிறுவனத்தின் துணை அமைப்பாக செயல்பட்டு வருகிறது.