டெக் புதுசு!



Image result for samsung ssd x5



மார்க்கெட்டுக்கு புதுசு!

சாம்சங் SSD X5

சாம்சங்கின் புதிய ஹார்டிஸ்க் SSD X5 150 கி.எடையில் 500 ஜிபி, 1 டிபி,2டிபி நினைவக அளவில் ஹார்ட் டிஸ்க் கிடைக்கிறது. வேகம் 2,300MB/s. 4K தரமுள்ள 20 ஜிபி வீடியோவை 12 நொடிகளில் பரிமாற்றம் செய்யலாம். வீடியோ, 2டி, 3டி அனிமேஷன், புகைப்படம் உள்ளிட்ட துறையினருக்கு அற்புதமான சாதனம் இது. 256 பிட் என்கிரிப்ஷன் இருப்பதால் தகவல்களுக்கு சூப்பர் பாதுகாப்பு உள்ளது. நீரில் 2 மீட்டர் ஆழத்தில் விழுந்தாலும் தகவல்களுக்கு பிரச்னை இல்லை என்பதோடு வெப்பத்தை குறைக்கும் வசதியும் எக்ஸ் 5 டிரைவில் உண்டு. விலை ரூ. 28,123(500GB)
எல்ஜி ஜி7-1, ஜி7 ஃபிட்
ஜெர்மனியின் பெர்லினில் நடைபெறும் IFA விழாவில் வெளியிடப்பட்ட ஜி7-1, ஜி7-ஃபிட் என இருபோன்களின் விலையும் எல்ஜியால் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 6.1 இன்ச் எல்சிடி திரை, 4 ஜிபி ரேம், 32 ஜிபி -1 டிபி வரை விரிவாக்கும் நினைவக வசதி, முன்புறம் 8 எம்பி, பின்புறம் 16 எம்பி கேமரா, 3,000 mAh பேட்டரி என வசதிகள் நீள்கின்றன.