கேரளா நாயகர்கள்!






Image result for kerala collector works



தங்கமிட்டாய்!

எந்த விழாவாக இருந்தால் என்ன? மிட்டாய்கள், இனிப்பு, கார பலகாரங்கள் எடுத்து கொண்டாடாமல் ஸ்பெஷல் தினங்கள் ருசிக்குமா என்ன? குஜராத்தின் சூரத்திலும் அப்படியொரு தங்க இனிப்பு ரெடியாக இருந்தது.

குஜராத்தின் சூரத்தில் 24 கேரட் தங்க காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த இனிப்பின் விலை ஒரு கிலோ ரூ.9 ஆயிரம். யாரும் வாங்குவார்களோ இல்லையோ கடைக்காரர் பிரின்ஸ் இதனை வாங்கி வைத்திருக்கிறார். “இனிப்புகளை வெள்ளி காகிதங்களில் வைப்பதை விட தங்க காகிதங்களில் மூடி வைப்பது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது” என்கிறார் பிரின்ஸ். ராக்கியின் புது ரகமா? என்பவர்கள் கூட விலையைக் கேட்டதும் உடனே அந்த இடத்தை காலி செய்துவிடுகிறார்கள் என்பதே கடைக்காரர்களின் வருத்தம். பர்சை பழுக்க வைத்தால் எப்படி?

2


சீனாவின் ரோபோ டாக்டர்!

அண்மையில் சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த ரோபோ கண்காட்சி அனைவரையும் வியக்கவைத்துள்ளது. பேட்மின்டன் விளையாடும், நோய்களை கண்டறியும், இசையமைக்கும் என பல்வேறு திறன்களை கொண்ட ரோபோக்கள் இக்கண்காட்சியை அலங்கரித்தன.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில், வயதானவர்கள் எண்ணிக்கை கணிசமானளவு அதிகரிப்பதால், அதனை சீர் செய்ய ரோபோக்களையே அரசு நம்பியுள்ளது. 2014 ஆம் ஆண்டே இதற்கான அச்சாரத்தை போட்ட ஜின்பிங், “இது ரோபோ புரட்சிக்கான காலம்” என்று பேசினார். மேட் இன் சீனா 2025 திட்டப்படி மனிதர்களை தொழிற்சாலைகளின் குறைப்பதே முதல்நோக்கம். இதற்காக சிறுவர்களை உற்சாகப்படுத்தும் சண்டை ரோபோக்கள் முதல் டாக்டர் ரோபோக்கள் வரை தயாரிக்க சீன அரசு மானியத்தை அள்ளிக்கொடுத்து வருகிறது. அப்போ, தமிழ்படத்துல சீன ரோபோதான் வில்லன் ஓகே.!

3

கேரளா நாயகர்கள்!


அண்டை மாநிலமான கேரளாவில் ஏற்பட்ட கனமழையால் அணைகள் நிரம்பி திறக்கப்பட்டுவிட,  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கையறுநிலையில் வீடிழந்துள்ளனர். 200 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்திற்கு பலியாகியுள்ள நிலையில் கௌரவம் பார்க்காமல் உழைத்துவரும் இரு ஐஏஎஸ் அதிகாரிகளின் பணிகள் மக்களால் இணையமெங்கும் பாராட்டப்பட்டு வருகிறது.

கேரளாவில் வயநாடு பகுதியில் மாவட்ட ஆட்சியர்களாக உள்ள ராஜமாணிக்கம், துணை ஆட்சியர் என்எஸ்கே உமேஷ் என்ற இருவரும் மக்களுக்குத் தேவையான அரிசி மூட்டைகளை தோளில் சுமந்துசெல்லும் வீடியோ அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. வயநாடு பகுதியில் பேரிடர் மேலாண்மை பணி ராஜமாணிக்கமும், உமேஷ் உள்ளிட்ட இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அரசினால் அளிக்கப்பட்டது. இரவு 9.30 மணிக்கு இடையறாத பணிகளின் நடுவே, அரிசி மூட்டைகள் கொண்டுசெல்ல ஆட்கள் குறைந்தனர். உடனே கௌரவம் பார்க்காமல் அரிசிமூட்டைகளை தூக்கிசென்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தை, உமேஷூம் பின்தொடர்ந்து பணியை செம்மை செய்திருக்கின்றனர். வெள்ள பாதிப்புகளை சமாளிக்க மத்திய அரசும் பிற மாநில அரசுகளும் கேரளா அரசுக்கு உதவிவருகின்றன.     








பிரபலமான இடுகைகள்