நெல்சன் மண்டேலாவின் அகிம்சை வழி!
நெல்சன் மண்டேலா வழியில்!
2005 ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகையாளர் எஸ்கிண்டர் நெகா, மனைவி செர்கலம்
ஃபாசில் எத்தியோப்பியா அரசினால் தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ்
சிறைதண்டனை அனுபவித்து வருகிறார் நெகா.
1974 ஆம் ஆண்டு மார்க்சிய ராணுவம் எத்தியோப்பாவில் ஆட்சிக்கு வந்தபோது,
நெகா அமெரிக்காவில் அரசியல் பொருளாதார பட்டம் பெற உழைத்துக்கொண்டிருந்தார். 1991
ஆம் ஆண்டு எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி(EPRDF) கட்சி ஆட்சிக்கு
வந்தது. 1993 ஆம் ஆண்டு தைரியமாக புதிய நாளிதழை நெகா தொடங்கினார். அப்போது
ஆட்சிசெய்தது, மக்கள் தொகையில் 6% உள்ள திக்ராயன்ஸ் மக்களைக் கொண்டுள்ளது
எத்தியோப்பா அரசு. உள்நாட்டு நிகழ்வுகளை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகளில் நெகா
எழுத அரசின் பார்வை இவர் மீது விழுந்தது. பொய் குற்றச்சாட்டுகளின் மூலம்
சிறையிலடைக்கப்பட்டார் நெகா. “எத்தியோப்பா அரசு தென் ஆப்பிரிக்க அரசியல் மாதிரிகளை
அப்படியே பின்பற்றுகிறது. நாம் அனைவரும் வெ்வேறு வேகத்தில் சென்றாலும் நம் இறுதி
இலக்கு ஜனநாயக சுதந்திரம்தான். இதனை அடைய கட்சியை விட சமூக அமைப்பை நம்புகிறேன்”
என்பது நெகாவின் நம்பிக்கை சொல். சிறையில் அடைக்கப்பட்டபோது பிறந்த நஃப்கோட் எனும்
நெகாவின் பிள்ளை எத்தியோப்பாவின் ஜனநாயகத்தை போலவே மெல்ல வளர்ந்துவருகிறான்.