இந்தியா முழுக்க ஒரே கார்டு! - NCMC அறிவீர்களா?
ஒரே தேசம் ஒரே கார்டு!
லண்டன் மற்றும் சிங்கப்பூரிலுள்ளதைப்
போல பஸ்,மெட்ரோ ரயில், உள்ளூர் ரயில் என அனைத்து போக்குவரத்திற்கும் ஒரே அடையாள அட்டையை
பயன்படுத்த இந்திய அரசு ஆலோசித்து வருவதாக நிதி ஆயோக் அமைப்பின் இயக்குநரான அமிதாப்
கன்ட் கூறியுள்ளார்.
“எதிர்காலத்திற்கேற்ப வாகனங்களை
வடிவமைப்பதோடு மக்களின் பயன்பாட்டையும் வடிவமைப்பு முக்கியம். அரசு அதற்கான முயற்சிகளில்
உள்ளது” என்கிறார் அமிதாப் கன்ட். இவ்வாண்டிற்கான வாகன மாநாட்டில் இந்தியா அடுத்த தலைமுறை
வசதிகளை அறிமுகம் செய்யவிருக்கிறது. லண்டன் ரயில்களில் பயணிக்க உதவும் ஆய்ஸ்டர் கார்ட்டை
போலவே, தலைநகரான டெல்லியிலும் ரயில்களில் பயணிப்பதற்கான கார்டு இவ்வாண்டின் ஜனவரி
9 தேதியன்று சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் இணையதளத்தில் இத்திட்டத்திற்கான
பொருத்தமான பெயரை மக்கள் தேர்ந்தெடுக்க அரசு கோரியுள்ளது. தேசிய பொதுபோக்குவரத்து அட்டை(NCMC)
மூலம் கடைகள், ஸ்மார்ட்நகரங்கள், டோல்கேட்களிலும் எளிதில் பணம் செலுத்தும் வசதியை அரசு
கொண்டுவர எண்ணியுள்ளது.