கருணை காட்டுங்கள் ட்ரம்ப்!
கருணை காட்டுங்கள் ட்ரம்ப்!
“நீதிபதிகள், வழக்குகள் எதுவும்
தேவையில்லை. எங்கள் நாட்டுக்கு வரும் அகதிகளை உடனே திருப்பு அனுப்பிவிடுவோம்” என கடந்த
ஜூன் 24 அன்று ட்விட்டர் பதிவில் நெருப்பை கக்கினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ட்ரம்ப்பின்
அரசியல் புரியாமல் அமெரிக்கா- மெக்சிகோ இரு நாடுகளுக்கிடையான பாலத்தில் வாரக்கணக்காக
காத்திருக்கும் மக்கள் அமெரிக்காவில் நுழைய பரிதாபமாக காத்திருக்கிறார்கள். ஆகஸ்ட்
20 அன்று, “சுவர் உறுதியாக வலுவாக கட்டப்பட்டு வருகிறது” என ட்ரம்ப் கூறுவதன் அர்த்தம்
அவை மெக்சிகோ எல்லையில் அல்ல; மக்களின் மனதில் கட்டப்பட்டு வருவதையே சூசகமாக குறிப்பிட்டார்.
மாடமாரோஸ், மெக்சிகோ, ப்ரௌன்ஸ்வில்லே,டெக்சாஸ்
ஆகிய இடங்களிலுள்ள துறைமுகம் வழியாக வரும் அகதிகளை அமெரிக்கா தற்போது தடுத்து நிறுத்தியுள்ளது.
அங்கு தங்கியுள்ள மக்கள் உள்நாட்டு போர், வறுமை பிரச்னைகளால் வாழ வழியற்று அமெரிக்காவை
தேர்ந்தெடுத்து வந்தவர்கள். ஜெர்மனி தவிர பிற நாடுகளில் அகதிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு
கிடையாது. தீவிரவாத பிரச்னை என்றால் உடனே அகதிகளை கைகாட்டுவது புதிய கலாசாரமாகி வருகிறது.
அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செசன் கருத்துப்படி மக்களை திருப்பி அனுப்புவது இனி நடைபெறக்கூடும்.