கென்யாவை பிரபலப்படுத்தும் பெண்மணி!
கென்யாவின் முகவரி!
கென்யாவின் பிரபல மக்கள்
தொடர்பு நிறுவனமான டின் கரியுகி, பொதுமக்கள் தொடர்பில் முக்கியமான புள்ளி. தனது
கினாடின் குரூப்(1997) கென்யாவுக்கு புத்துயிரூட்டி வருகிறார்.”நான் பள்ளியில்
படிக்கும்போது ஆசிரியர் ஒன்றுக்கும் உதவாதவள் என திட்டினார். இதோ அக்கூற்றை பொய்
என்று நிரூபித்துவிட்டேன்” எனும் கரியுகி, செஞ்சிலுவை சங்கங்கள் மூலம் கென்யக் குழந்தைகளின்
ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க 7.9 மில்லியன் டாலர்களை திரட்டி
வழங்கியுள்ளார்.
கென்யாவின் நன்யுகி
பகுதியில் பெற்றோர்களுக்கு 4 ஆவது. பெண்ணாக பிறந்தார். இங்கிலாந்தில் பட்டம்
பெற்றவருக்கு முதல் கனவு, பத்திரிகையாளர்தான். அதிபர் டேனியல் அராப்மொய்
சர்வாதிகாரத்தால் தயங்கி, பார்க்லேய்ஸ்
நிறுவனத்தில் மக்கள் தொடர்பாளராக பணிக்கு சேர்ந்தார்.பின்னர் சொந்த நிறுவனம்
தொடங்கினார்.
ஆப்பிரிக்காவின்
பேஸ்பால் விளையாட்டு, ஆப்பிரிக்க உள்ளூர் விளையாட்டு வீரர்களை வெளிக்கொண்டுவரவும்
பல்வேறு பிரசாரங்களை செய்துவருகிறார். “கேம்பிரிட்ஸ் அனாலிடிகா நிறுவனத்தில்
பல்வேறு செயல்பாடுகளை சட்டத்திற்கு புறம்பானவை என முதல் சந்திப்பிலேயே தெரிந்து
விலகிவிட்டேன். தேர்தல் பணிகளை இதுவரை மட்டுமல்ல இனிமேலும் செய்வதில்லை” என
துணிச்சலாக பேசுகிறார் கரியுகி.