எமிரேட்ஸின் ஜன்னலற்ற விமானம்!





Image result for windowless aircraft


ஜன்னலற்ற விமானம்!

இனி தயாரிக்கப்படும் விமானங்களில் செலவையும் எடையையும் குறைக்க கண்ணாடிகளை தவிர்க்கும் ட்ரெண்ட் புதிதாக தொடங்கியுள்ளது. எமிரேட்ஸ் விமானநிறுவனம் தொடங்கியுள்ள இம்முறையில், விமானங்களில் நேரடியாக கண்ணாடி ஜன்னல்கள் இருக்காது. அதற்கு பதிலாக, கேமராக்களில் படம் பிடிக்கப்பட்ட படங்களை உள்ளேயிருந்து காணலாம். எமிரேட்ஸின் போயிங் 777-300ER விமானங்களில் முதல்வகுப்பில் இம்முறை சோதித்து பார்க்கப்பட்டுள்ளது.

“ஜன்னல்களை அகற்றுவதால் விமானங்கள் எடை குறைந்து அதனை எரிபொருள் சிக்கனமாகவும் வேகமாகவும்  செலுத்தமுடியும்’’ என்கிறார் எமிரேட்ஸின் தலைவர் டிம் கிளார்க். “விமானசேவையின் அப்டேட் என்றாலும் ஜன்னலில் வேடிக்கை பார்ப்பதும், அதே காட்சிகளை டிவி திரையில் காண்பதும் ஒன்றல்ல. அவசரநிலையின்போது ஜன்னல் இல்லையென்றால் வெளியேயுள்ள நிலையை அறிவது சிரமம்” என எதிர்ப்புக்குரலை பதிவு செய்கிறார் கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் கிரஹாம் பிரெய்த்வெய்ட். எரிபொருள் சிக்கனத்தை முக்கியமாக வலியுறுத்துவதால் விரைவில் ஜன்னலற்ற விமானங்கள் வானில் பறக்கத்தொடங்கும் என நம்பலாம்.

பிரபலமான இடுகைகள்