இடுகைகள்

அட்ச லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூமியை விதம் விதமான கணித வடிவங்களால் வரைந்த புவியியல் வல்லுநர்கள் - புவியியல் அறிமுகம்

படம்
  டோலமி - தொன்மையான புவியியல் ஆராய்ச்சியாளர்  கிளாடியஸ் டோலமி. தொன்மையான கிரேக்க நாட்டின் எகிப்தில் பிறந்தவர். கிரிகோ ரோமன் புவியியல் தகவல்களை உருவாக்கினார். கூடுதலாக கணிதம், வானியல் ஆகியவற்றிலும் திறமையானவராக இருந்தார். புவியியல் என்ற பெயரில் எட்டு பாகங்களைக் கொண்ட நூலொன்றை உருவாக்கினார். அதிலுள்ள தகவல்களைக் கொண்டுதான் உலக நாடுகளின் வரைபடம் வரையப்பட்டது. இதில் 26 உள்ளூர் பிரதேசங்களும் அடையாளம் காணப்பட்டன. அப்படியானால் அந்த நூலில் எவ்வளவு தகவல்கள் சேகரித்து எழுதப்பட்டிருக்கும் பாருங்கள்....  நூலில் எட்டாயிரம் இடங்களின் பெயர்களையும் குறித்து வைத்திருந்தார்.  13 பாகங்களாக எழுதப்பட்ட அல்மாகெஸ்ட் என்ற நூலில் சூரிய குடும்பம் பற்றிய ஏராளமான தகவல்களை பதிவு செய்திருந்தார். நான்கு பாகங்களாக வெளிவந்த டெட்ராபிபிலோஸ் என்ற நூலில் ஜோதிடத்தை அறிவியல் பூர்வமாக விளக்கியிருந்தார். டோலமியின் அறிவும், அவரது படைப்புகளும்தான் உலக நாடுகளின் வரைபடங்களை ஆய்வாளர்கள், வல்லுநர்கள் உருவாக்கவும் புவியியல் துறையை பின்னாளைய தலைமுறையினர் புரிந்துகொள்ளவும் உதவியது.  2 கிளாடியஸ் டோலமி பூமி என்ன வடிவில் இருக்கிறது என்பது