இடுகைகள்

குறுகிய நினைவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நினைவை எப்படி மூளை தட்டி எழுப்புகிறோம்? - மூளையிலுள்ள நினைவை பாதுகாக்கும் பகுதிகள் ஒரு பார்வை

படம்
          ஞாபகம் வருதா ? சிலரது கைகளை தொட்டால் பல்வேறு நினைவுகள் வரும் . சிலரது முகத்தை பார்த்தால் நமக்கு நெருக்கமானவர்களின் நினைவு பல ஆண்டுகளுக்கு சென்று உடனே ரீகேப் ஆகி மீளும் . சிலரது உடல்மொழி கூட நமக்கு தெரிந்தவர்களை திடீரென பெய்யும் அடைமழை போல நினைவுப்படுத்தி செல்லும் . இதெல்லாம் எப்படி நடக்கிறது ? மூளையில் அதற்கான பார்ட்டுகளை பிரம்மா தனது கையாலேயே செய்து வைத்திருக்கிறார் . உணர்வுரீதியான நினைவு , குறுகியகால நினைவு , நீண்டகால நினைவு என மூன்று வகை நினைவுகள் உள்ளன . உணர்வு ரீதியான உணர்வு சில நொடிகள் மட்டும்தான் நீடிக்கும் . குறுகியகால நினைவுக்கு ஆயுள் 20 நொடிகள் . நீண்டகால நினைவுக்கு ஆயுள் அதிகம் . நினைவுகளைப் பொறுத்தவரை அதனை முக்கியம் என்று நீங்கள் கருதினால் அது நிலைக்கும் . இல்லையென்றால் மண்டையில் நிற்காது . நடத்துநர் எச்சிலைத் தொட்டு டிக்கெட் கிழித்தாரா என்பது மூளையில் சேமித்து வைக்கவேண்டிய விஷயமில்லை . ஆனால் அவருக்கு சரியான காசை கொடுத்து டிக்கெட் வாங்கினோமா என்பது முக்கியம் . அதைவிட முக்கியமானது . அவரிடம் சொன்ன இடத்தில் இறங்கி நண்பனை சந்தித்தோமா என்பது நினைவு கொள்ளவேண்ட