நினைவை எப்படி மூளை தட்டி எழுப்புகிறோம்? - மூளையிலுள்ள நினைவை பாதுகாக்கும் பகுதிகள் ஒரு பார்வை

 

 

 https://images.wallpaperscraft.com/image/hands_touch_love_150595_1280x720.jpg

 

 

ஞாபகம் வருதா?


சிலரது கைகளை தொட்டால் பல்வேறு நினைவுகள் வரும். சிலரது முகத்தை பார்த்தால் நமக்கு நெருக்கமானவர்களின் நினைவு பல ஆண்டுகளுக்கு சென்று உடனே ரீகேப் ஆகி மீளும். சிலரது உடல்மொழி கூட நமக்கு தெரிந்தவர்களை திடீரென பெய்யும் அடைமழை போல நினைவுப்படுத்தி செல்லும். இதெல்லாம் எப்படி நடக்கிறது?


மூளையில் அதற்கான பார்ட்டுகளை பிரம்மா தனது கையாலேயே செய்து வைத்திருக்கிறார். உணர்வுரீதியான நினைவு, குறுகியகால நினைவு, நீண்டகால நினைவு என மூன்று வகை நினைவுகள் உள்ளன. உணர்வு ரீதியான உணர்வு சில நொடிகள் மட்டும்தான் நீடிக்கும். குறுகியகால நினைவுக்கு ஆயுள் 20 நொடிகள். நீண்டகால நினைவுக்கு ஆயுள் அதிகம். நினைவுகளைப் பொறுத்தவரை அதனை முக்கியம் என்று நீங்கள் கருதினால் அது நிலைக்கும். இல்லையென்றால் மண்டையில் நிற்காது. நடத்துநர் எச்சிலைத் தொட்டு டிக்கெட் கிழித்தாரா என்பது மூளையில் சேமித்து வைக்கவேண்டிய விஷயமில்லை. ஆனால் அவருக்கு சரியான காசை கொடுத்து டிக்கெட் வாங்கினோமா என்பது முக்கியம். அதைவிட முக்கியமானது. அவரிடம் சொன்ன இடத்தில் இறங்கி நண்பனை சந்தித்தோமா என்பது நினைவு கொள்ளவேண்டியது அவசியம்.


குறிப்பிட நினைவு நமக்கு சரியான நேரத்தில் வரவில்லை என்றால் அதனை முக்கியமாக நாம் கருதவில்லை என்று பொருள். இங்கு அல்சீமர் வியாதியை நினைவுகொள்ளவேண்டாம். வீட்டை பூட்டினோமா என்று சந்தேகம் வருவது, பைக், கார் சாவியை எங்கே வைத்தோம் என வீட்டை சல்லடை போட்டு தேடுவது, மாஸ்க்கை கைவிட்டு சூப்பர் மார்க்கெட் செல்வது ஆகியவற்றை இதில் சேர்க்கலாம். மூளையில் உள்ள முக்கியமான பாகங்கள் இப்போது பார்க்கலாம்.


நினைவு கொள்வது எப்படி?


அஞ்சல்நிலையத்தைப் பார்த்ததும் அங்கு சென்று கடிதம் வாங்கும் நினைவும், பெட்டியில் போட கடிதமும் நினைவுக்கு வருவது எப்படி என யோசித்திருக்கிறார்கள்? இதற்கு காரணம் மூளையிலுள்ள நியூரான்கள் தங்களுக்கு்ள் பரிமாறிக்கொள்ளும் சிக்னல்கள்தான் காரணம். இப்படி பரிமாறுவது வேகமானால் அது முக்கியமான நினைவாக பதிந்துவிடும் வாய்ப்ப உள்ளது. குறிப்பிட்ட பொருள் மற்றொன்றை நினைவுபடுத்தி இன்னொரு விஷயத்தை செய்யவைப்பது என்பது சர்க்கிள் பார்மேஷன் என்று அழைக்கிறார்கள். குறிப்பிட்ட இடத்தைப் பார்த்து அதுதொடர்பான நினைவுகள் உங்களுக்கு மனதில் அலையடித்தால் அதனை இப்படி சொல்லலாம். குறிப்பிட்ட வழிகாட்டி பலகை, அடையாளம் வட்டவடிவிலான நினைவுகளை ஏற்படுத்த முடியும். இதனை பெரனோலாஜிகல் லூப் என்கின்றனர்.


பிரான்டல் லோப்


இந்த பகுதியில் நீண்டகால நினைவுகள் சேமிக்கப்படுகின்றன. இதில் சமூகம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் சேகரித்து வைக்கப்படுகிறது. இதில் ஒருவரின் எதிர்பார்ப்பு ஆசைகளும் உள்ளன.


புடாமென்


இந்தப்பகுதியில் நீண்டகால நினைவுகள் சேகரித்து வைக்கப்படுகின்றன.


அமிக்டலா


இந்த இடத்தில் உணர்ச்சிரீதியான நிகழ்ச்சிகள், சம்பவங்கள் பதிந்து வைக்கப்படுகின்றன.


டெம்போரல் லோப்


இந்த இடத்தில் பேச்சுத்திறன், மொழி ஆகியவை சேமிக்கப்பட்டுள்ளன. இதனுள்தான் ஹிப்போகாம்பஸ் பகுதியும் அமைந்துள்ளது. ஹிப்மோகாம்பசில் குறுகிய கால நினைவுகள் நீண்ட காலம் நிலைத்திருக்கும்படியாக மாற்றப்படுகிறது. இதில் அடிபடும்போது புதிய நினைவுகள் உருவாக்கப்படாது.


செரிப்பெல்லம்


உடலுக்கும் மனதிற்குமான ஒத்திசைவு இங்கு உருவாகிறது. இதில் அடிபட்டால் ஒருவரின் நடவடிக்கை அனைத்தும் பாதிக்கப்படும். இவர்களால் சரியாக நடக்கவோ இயங்கவோ முடியாது.


காக்டஸ் நியூக்ளியஸ்


இந்தப்பகுதி மனிதர்களின் நினைவுப்பகுதியைக் கையாள்கிறது. தாலமஸ் பகுதி உடலின் தூக்கத்தை ஒழுங்குமுறைப்படுத்துகிறது.


பேரிடல் லோப்


இந்தப்பகுதி கண்களால் நாம் பார்க்கும் விஷயங்களை உள்வாங்கி பரிசீலிக்கிறது. விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.


பிபிசி



கருத்துகள்