அதீத தேசியவாதம் உலக நாடுகளிடையே உள்ள கூட்டுறவைக் குலைக்கிறது!- சிவசங்கர் மேனன்
சிவசங்கர் மேனன்
முன்னாள் பாதுகாப்புத்துறை ஆலோசகர்
இவர் தற்போது சாய்சஸ் இன்சைட் தி மேக்கிங் ஆப் இந்தியன் பாரீன் பாலிசி என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலைப்பற்றியும் தற்போது உள்ள அரசியல் நிலைமை பற்றியும் பேசினோம்.
வரலாற்றில் நிலப்பரப்பு என்பதை ஏன் முக்கியமாக நினைக்கிறீர்கள்?
நாம் உலக அரசியல் நடப்புகளில் பங்கேற்றுள்ளோம். இதில் வலிமை வாய்ந்த நாடுகள், அணிசேரா நாடுகள் ஆகியவை உள்ளடங்கும். இந்தியா - அமெரிக்கா, இந்தியா - ரஷ்யா, இந்தியா - சீனா ஆகிய கூட்டணிகள் வரலாற்றில் உள்ளன. நாம் எப்படி உருவாகினோம். எந்த இடத்தில் உருவாகினோம் என்பதை இன்று மறந்துவிட்டோம். நிலப்பரப்புரீதியான அரசியல் என்பதில் வரலாறு, ஆதாரங்கள், நிலப்பரப்பு ஆகியவை முக்கியமானது. நீண்டகால நோக்கில் பயனளிக்கும் விஷயங்களை செய்யவேண்டும்.
சீனா இப்போது வளர்ந்து வரும் முக்கியமான நாடாக உள்ளது. ஆனால் அதிலும் தேசியவாதம் முக்கியமானதாக உள்ளது. இந்தியாவில் கூட இதே விதமாக தேசியவாதம் ஆதிக்கத்தில் உள்ளது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்?
தேசியவாதம் என்பது ்19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவானது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். சீனாவின் தேசியவாதம் இந்தியாவை விட பழமையானது. மேலும் அது சோசலிச கருத்தோடு தொடர்புடையது. உலகளவில் பொருளாதார பிரச்னை ஏற்பட்டபோது இந்தியா மற்றும் சீனாவில் தேசியவாத கருத்து வலுப்பெற்றது. ஆனால் நடைமுறையில் இந்த நாடுகள் உலகத்தை சார்ந்தே உள்ளது. உலகமயமாக்க கலாசாரத்தால் அனைத்து நாடுகளும் இணைந்துள்ளன. இன்று மக்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைவர்கள் கொள்கை வழியாக பெறவும் கொடுக்கவுமான செயல்பாடுகளை மேற்கொள்ளும் திறனற்றவர்களாக உள்ளனர். உலகில் உள்ள பாகுபாடுகள் காரணமாக தடுப்பூசிகளைக் கூட பிற நாடுகளுக்கு வழங்க நாடுகள் முன்வரவில்லை. உலகளவில் தேசியவாதம் என்பது ஏற்படுத்தியுள்ள பாதிப்பு என்பது கூட்டுறவைக் குலைத்ததுதான்.
இந்தியா மற்றும் சீனாவுக்கு முன்பிருந்த சுமூகமாக உறவு இன்றில்லை. இந்த நேரத்தில் நாம் என்ன செய்வது?
சீனா இன்று இந்தியாவை விட நான்கு மடங்கு பெரிய பொருளாதார பலத்தைக் கொண்டுள்ளது. மேலும் இந்தியாவின் முக்கியமான வணிக கூட்டாளி. எனவே அதனை வெறுத்து ஒதுக்காமல் அதனுடன் இணைந்து பணியாற்றும் தேவை உள்ளது. பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் உருவாக்கப்படுவதற்கு இந்தியாவின் பகுதிகள் தேவை. அதில் இந்தியா குறுக்கிடும்போது இந்தியாவின் ஐ.நா உறுப்பினர், என்எஸ்ஜி உறுப்பினர் ஆகிய அங்கீகாரங்களை சீனா தடுக்கும். 1988 தொடங்கிய எல்லைப் பிரச்னை இன்றுவரை இருக்கிறது. அதையும் தாண்டிய பல்வேறு பிரச்னைகளை சீனாவுடன் சந்தித்து வருகிறோ்ம்.
டைம்ஸ் ஆப் இந்தியா
இந்திராணி பக்சி
கருத்துகள்
கருத்துரையிடுக