பொன்ஸி திட்டங்களின் மீது மக்களுக்கு குறையாத ஆர்வம்! - மேற்குவங்கம், தமிழகம் முன்னிலை-
சார்லஸ் பொன்ஸி |
நுணுக்கமாக ஏமாற்றுவது எப்படி?
அமெரிக்காவில் 1920ஆம் ஆண்டில் பெருந்தொற்று பாதிப்பிற்கு பிறகு பொருளாதாரம் வளரத்தொடங்கியுள்ளது இதனால் பல்வேறு பங்குகளில் முதலீடு செய்வதற்கு பணக்காரர்கள் முதலீடு செய்ய முண்டியடித்தனர். இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தன்னை வளர்த்துக்கொண்டவர்தான் சார்லஸ் பொன்ஸி. இவருடன் கூட்டணி சேர்ந்து தன்னை வளர்த்துக்கொண்டவர் பெர்னி மேடாப். இவர் செய்த குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு 150 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. கடந்த வாரத்தில்தான் இவர் மறைந்தார்.
பெர்னி, பொன்ஸி என இருவரின் காம்போதான் வரலாற்றில் பெரும் பொன்ஸி திட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்களை ஏமாற்றியவர்கள். பொன்ஸியை விட அதிக காலம் முதலீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர் பெர்னி. முதலீட்டாளர்களிடம் 64 பில்லியன் டாலர்களைப் பெற்று அவர்களுக்கு ஆண்டுக்கு 10 சதவீத தொகையை திருப்பிக் கொடுத்தார். எப்படி? எதிலும் முதலீடு செய்யவில்லை. புதிதாக ஆட்களை அறிமுகம் செய்யவேண்டும். அப்படி செய்தால் கூடுதலாக தொகை கிடைக்கும். புதிதாக திட்டத்தில் இணையும் பலரிடம் இருந்து கிடைக்கும் தொகையை
பழைய முதலீட்டாளர்களுக்கு கொடுத்து சமாளித்து திட்டத்தை வளர்ப்பதுதான் இதன் கான்செப்ட். முதலில் உடனடியாக இதில் சேரும் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி கிடைக்கும். இதனால் அவர்கள் அவர்களுக்கே தெரி
யாமல் இந்த திட்டத்தின் விளம்பரத் தூதர்களாக மாறுவார்கள். வாய் வழியாக கிடைக்கும் விளம்பரமும், மக்களின் பேராசையும்தான் இதில் முக்கியமான அம்சங்கள்.
ஸ்பெயினில் உள்ளவர் அமெரிக்காவில் உள்ள மாத இதழை வாங்க விரும்பினார். அதாவது சந்தா முறையில். இதற்காக அவர் பதில் அளிக்கும் கூப்பனை அமெரிக்காவுக்கு அனுப்பினார். இதில் ஒரு அமெரிக்க சென்டுக்கு நிகராக ஸ்டாம்புகளை ஒட்டி அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால் இதனை அமெரிக்காவில் மாற்றிக்கொள்ளும்போது ஆறு அமெரிக்க சென்டுகள் அவருக்கு கிடைக்கும். இதனை அப்படியே கான்செப்ட்டாக மாற்றிய பொன்ஸி, நீண்டகாலம் எதற்கு காத்திருக்கிறீர்கள். உங்கள் முதலீட்டுக்கு தொண்ணூறு நாட்களில் இருமடங்கு பணம் தருகிறேன் என்று சொல்லி திட்டத்தை அறிவித்தார். இப்படி வலையில் சிக்கிய 40 ஆயிரம் முதலீட்டாளர்களை பயன்படுத்திக்கொண்டார். மூன்று மாதங்களில் 100 சதவீத பணம் வழங்கப்படும் என்றதும் பலரும் பேராசைப்பட்டு விட்டனர். பொன்ஸி தனது வாழ்க்கையை பரம சொகுசாக வாழத் தொடங்கினார். ஆனால் அனைத்தும் ஒருமுடிவுக்கு வந்துதானே ஆகவேண்டும். போஸ்டன் போஸ்ட் பத்திரிகையில் பொன்ஸியின் தில்லுமுல்லு விவரமாக வெளியே வர 26 ஜூலை 1920ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. பொருளாதார துறையில் பொன்ஸியின் திட்டத்தை யாரும் மறக்கவே முடியாது. குறிப்பிட்ட காலகட்டங்களில் அவரை நினைவுப்படுத்தும் யாரோ ஒருவர் வந்து மக்களின் பேராசையைப் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த திட்டம் குறுகிய காலத்திற்கானதுதான். பொன்ஸி திட்டப்படி மூன்று மாதங்களுக்கு நூறு சதவீத வட்டி கிடைக்கிறது. இவரது திட்டம் ஓராண்டுக்கு நீண்டால் அவர் முதலீட்டாளர்களுக்கு 1500 சதவீத தொகையை வழங்கவேண்டும். ஸ்பீக் ஆசியா, ஸ்டாக் குரு என நிறைய பொன்ஸி திட்டங்கள் உள்ளன. இவற்றில் அடிப்படையான ஒற்றுமை குறைந்த காலம், அதிக வட்டி. கட்டையால் அடித்தால் மயக்கம் வரும் எனும் சுந்தர் சி பட லாஜிக்கை நாம் நம்புவது போல முதலீட்டாளர்கள் சொல்லி வைத்தது நம்பி ஏமாந்தனர்.
ஹோம் டிரேட் எனும் நிறுவனம் நிதிசேவைகளை வழங்கி வந்தது. இதற்கு யார் விளம்பரத் தூதர்கள் தெரியுமா? நடிகர் ஷாரூக்கானும், கிரிக்கெட் வீரர் டெண்டுல்கரும்தான். இந்த நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்தால் அரசின் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து பணத்தை திரும்ப தருவதாக சொல்லியது. இதையே கூட்டுறவு நிறுவன வங்கிகளிடம் சொல்லி பணத்தை கடனாக பெற்று ஸ்வாகா செய்துவிட்டது. இதனை விளம்பரப்படுத்தியவர்கள் பிரபலமான பணக்கார மனிதர்களே .. என்று மக்கள் அணுகியபோது, எங்களுக்கு நிறுவனம் பற்றித் தெரியாது. விளம்பரத்தில் நடிக்க சொன்னார்கள். நடித்தோம் என்று இலகுவாக விலகிக்கொண்டார்கள். மக்கள் பணம் தொலைந்தே போனது. மேற்கு வங்கத்தில் தீதிக்கு இப்போதும் கொடுங்கனவாக இருக்கும் சாராத திட்டங்களுக்கும் இதே நிலைதான். இதில் மிதுன் சக்கரவர்த்தி விளம்பர தூதராக இருந்தார். நிறுவனம் மோசடி செய்து மூழ்கியபோது அரசு, மிதுனின் சட்டைக்காலரை பிடித்துவிட்டது. அமலாக்கத்துறை மூலம் 1.2 கோடி ரூபாயை மிதுன் கொடுத்துவிட்டார். முன்னர் கூறிய ஹோம் டிரேட் நிறுவனம் 2000இல் உருவானது என்பதை மனத்தில் கொள்ளவேண்டும். சாரதா முறைகேடு 2015இல் நடைபெற்றது.
வெறும் திட்டங்களை மட்டும் இவர்கள் பேசுவதில்லை. சமூகம், தனது கனவு ஆகியவற்றில் தீவிரம் கொண்டவர்களாக காட்டிக்கொள்வதும் இவர்களது திறமைதான். அனுபவ் பிளான்டேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த சி நடேசன் இப்படிப்பட்ட ஒருவர்தான். நான் மரக்கன்றுகளை நடுவதில் எப்போதுமே ஆர்வம் கொண்டவர். திருநெல்வேலியில் உள்ள கோவிந்தப்பேரியில் மரங்கள் தீவைத்து எரிக்கப்பட்டதிலிருந்து நான் இந்த முடிவுக்கு வந்தேன் என்று நெகிழ்ச்சியாக பேசினார். எதில்? பிஸினஸ் டுடே பத்திரிக்கையில். அவ்வளவுதான் முதலீட்டாளர்களும் கூட நெகிழ்ச்சியாகி கண்ணில் வியர்க்கத் தொடங்கிவிட்டது.
இந்திய
மாநிலங்களில் மேற்கு வங்கம்,
தமிழகத்தில்தான்
அதிகளவு பொன்ஸி திட்டங்கள்
செயல்பாட்டில் இருக்கின்றன.
இங்கு
வங்கி அமைப்புகள் வலிமையாகவே
உள்ளன. ஆனால்
எங்கு பிரச்னை? மத்திய
வர்க்கம் பேராசைப்படுவதும்,
பிறரைப்
பார்த்து செயல்களை செய்யும்
மந்தை மனநிலையும்தான் காரணம்.
இப்படி
மோசடி செய்பவர்கள் அதிக
எண்ணிக்கையில் தண்டிக்கப்படுவதில்லை.
இவர்களே
அடுத்த தலைமுறை மோசடிக்காரர்களுக்கு
முன்மாதிரியாக உள்ளனர்.புத்திசாலித்தனமாக ஏமாற்றுவது என்பது கடினமான ஒன்று. அதனை மையமாக வைத்து வந்த சதுரங்க வேட்டை பார்த்திருப்பீர்கள். இதுபற்றிய தொடர் எம்எக்ஸ்பிளேயரில் கிடைக்கிறது. தி சாய்ஸ் என்று தேடுங்கள். எப்படி ஒருவரை ஏமாற்றுவது, பேசியே கவிழ்ப்பது ஆகியவற்றை தான் கற்ற பொருளாதார பாடங்களை வைத்தே பேராசிரியர் நடைமுறைப்படுத்துவார்.
லிவ் மின்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக