சீனாவிலிருந்து விடைகிடைக்காத கேள்விகள்! - கோவிட் -19 எங்கிருந்து பரவியது?

 

 

 

 

Cheap flights to Chengdu | CheapTickets.sg

 

கொரோனா பெருந்தொற்று


தடுப்பூசி போட்டவர்களுக்கும் கூட கொரோனா வருகிறது என எழுத்தாளர் பா.ரா கூறிவிட்டார். எனவே, நோய்த்தொற்று ஏற்பட்டாலும் கூட கவனமாக சிகிச்சை பெற்று உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டியதே முக்கியம் என்ற நிலையில் நாம் உள்ளோம். . 2003இல் ஏற்பட்ட சார்ஸ் பெருந்தொற்றை விட கோவிட் -19 பரவும் வேகம் அதிகமாக உள்ளது. மேலும் இதனால் ஏற்படும் அறிகுறிகளும் கடுமையானவைதான்.


பா.ரா தனது சமூக வலைத்தள பதிவில் கூறியதில் முக்கியமானது, மருத்துவரே தடுப்பூசி போட்டாலும் கூட நோய்த்தொற்று ஏற்படும் என்பதை உறுதிப்படுத்தினார் என்பதைத்தான். காரணம், தற்போது செலுத்தப்படும் தடுப்பூசியை விட தற்போது மாறியுள்ள கொரோனா வைரஸின் தன்மை செயல்திறன் கொண்டதாக உள்ளது. இந்த வைரஸ் எங்கிருந்து பரவியது என்ற கேள்விக்கு இன்றளவும் யாரிடமும் பதில் கிடைக்கவில்லை. சீனாவிலிருந்து பரவியது என பலரும் முன்னர் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் உலக சுகாதார அமைப்பு, வூகான் வைரஸ் ஆய்வு மையத்தில் செய்த சோதனையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆனால் வேறு எப்படி பரவியிருக்க முடியும் என்ற கேள்விக்கும் எந்த பதிலும் இல்லை எனபது அபாயகரமானது.


வூகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி இருக்கும் இடத்திலிருந்து முதன்முதலாக வைரஸ் பரவிய இடமான வூகான் நகரம் பத்து கி.மீ தூரத்தில்தான் உள்ளது. வைரஸ் ஆய்வு மையத்தில் பல்வேறு வித வைரஸ்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இதில் விலங்குகளிடமிருந்து பரவும் வைரஸ்களின் மாறுபாட்டை கண்டுபிடித்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் இது மனிதர்களிடையே வேகமாக பரவலாம் என்கிறார் ஆய்வாளர் சார்லஸ் ஸ்மித்.


வூகான் ஆராய்ச்சி மையத்தில் எந்த வைரஸ் தொற்றும் பிறருக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்கிறார் அதன் தலைவராக ஷி ஸென்ஜில். லெவல் 4 எனும் அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா இதனை மறுக்கிறது. 2004ஆம் ஆண்டு அங்கு ஏற்பட்ட சார்ஸ் பாதிப்பு இப்படித்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் இதில் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டதில் ஒருவர் இறந்துபோனார். 2003இல் ஏற்பட்ட சார்ஸ் பெருந்தொற்றை இதில் குழப்பிக்கொள்ளாதீர்கள்.


மிச்சமிருக்கும் கேள்விகள்


சார்ஸ் உயிர்கொல்லும் நோய்தான். சந்தேகமில்லை. ஆனால் அது மனிதர்களிடையே பரவுவதற்கு சில காலம் தேவைப்பட்டது. ஆனால் கொரோனாவைப் பொறுத்தவரை வேகம் அபாரமாக இருந்தது. இந்த வேகம் எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு நம்மிடையே பதில் இல்லை. சீனாவும் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை. 1100 வௌவால்களை பிடித்து சோதித்துள்ளது. பல்வேறு நீர்நிலைகளையும் சோதித்துள்ளது. சார்ஸ் கோவ் 2 எனும் வைரஸோடு நெருங்கிய தொடர்புடைய வைரஸான ராட்ஜி13 என்பதை சீனா 2016 முதல் சோதித்து வருகிறது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இந்த வைரஸை சீன அரசு யுன்னான் பகுதியிலிருந்து எடுத்து வந்து சோதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் சார்ஸ் வைரஸூம் 96 சதவீதம் ஒன்றுபோலவே உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.


யுன்னால் குகையிலிருந்து வூகான் ஆய்வு மையம் 1500 கி.மீ தூரம் உள்ளது. சாதாரண வௌவால் மூலம் பரவும் வைரஸ் எப்படி யாரையும் பாதிக்காமல் வூகான் வரை பரவியிருக்கும் என்ற கேள்வி முக்கியமானது. ஆனால் இதற்கு சரியான பதில்தான் யாருக்கும் தெரியவில்லை.

டைம்ஸ் ஆப் இந்தியா

கருத்துகள்