இயற்கையும் பழக்கத்தை தடுக்கும்! - இயற்கை பேரிடர்கள் மனிதர்களின் பழக்கவழக்கங்களை மாற்றுகின்றன

 

 

 

 

Hamburger, P, French Fries, Belly, Abdominal Fat, Fat

 

 

 


இயற்கையும் பழக்கத்தை தடுக்கும்!


தினசரி செய்யும் உடற்பயிற்சி, வாசிப்பு, வேலை என பல்வேறு விஷயங்களை தடாலடியாக மாற்றுவதில் இயற்கைக்கு பெரும் பங்கு உண்டு. வெயில், மழை, புயல் என வரும்போது ஒருவரின் தினசரி வாழ்க்கை பட்டியல் தடாலடியாக மாறிவிட வாய்ப்புள்ளது.


அமெரிக்காவின் சாண்டி புயல் ஏற்பட்டபோது அங்கு வாழும் மக்களின் தினசரி வாழ்க்கை பெரும் மாறுதலை சந்தித்தது. அவர்களின் உடற்பயிற்சி இருமடங்கு சரிவைச் சந்தித்தது. 2012ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 15ஆம் தேதிவரை சாண்டி புயல் தாக்குதல் இருந்தது. அதற்குப்பிறகு நியூஜெர்சி, நியூயார்க் ஆகிய நகரங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் உடற்பயிற்சி செய்தவர்களின் எண்ணிக்கை 13 சதவீதமாக குறைந்துவிட்டது.


அதேநேரம் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் முன்பை விட ஆரோக்கியமான உணவுகளைத் தேடி சாப்பிடத் தொடங்கிவிட்டனர். புகைப்பிடிப்பவர்களின் அளவு இப்பகுதிகளில் கூடியது. ஏறத்தாழ 17 சதவீதம். இயற்கை பேரிடர்கள் பொதுவாக ஒருவரின் இயல்பான வாழ்க்கையை பெரிதும் மாற்றக்கூடியது.. தினசரி வாழ்க்கையை பல்வேறு மாற்றங்களுடன் மாற்றியதோடு ஆரோக்கிய மான பழக்கவழக்கங்களிலும் கூட ஆதிக்கம் செலுத்தியுள்ளது.


-----------------

பழைய பழக்க வழக்கங்கள் மாறாது

Woman, Cigarette, Smoking, Smoke, Nicotine, Young

பொங்கல், தீபாவளி என்றால் இனிப்பு, பட்டாசு என இயல்பாக அனைவருக்கும் தோன்றுவது எப்படி? காரணம் பல்லாண்டுகளாக அதனை செய்து வருவதால் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இனிப்பு சாப்பிடுவதும், குஜிலி வெடி வெடிப்பதும் இயல்பாகிறது. விழிப்புணர்வற்ற நினைவகத்தில் பழைய பழக்கங்கள் பதிவாகியுள்ளன. இவை, தானியங்கி நினைவுகள் என்று கூறப்படுகின்றன. இதனால்தான் விடுமுறை என்றால் அதிக நேரம் தூங்குவதும், கறிச்சோறு தின்றே ஆகவேண்டுமென ரெஸ்டாரெண்ட் தேடி ஓடவும் வைக்கின்றன.


இதற்காக ஆராய்ச்சியாளர்கள் ஒரு சோதனையை செய்தனர். காபி கப்பை கப் என்று கூறுவதா, மக் என்று கூறுவதா என்று சோதித்தனர். இதில் என்னதான் முயன்றாலும் பலருக்கும் மக் என்பதை சொல்ல வரவில்லை. கப் என்றே கூறினர். இப்படி கூறுவதற்கு முக்கியமான காரணம், நமது நினைவகங்களில் உள்ள பழைய நினைவுகள்தா்ன்.


உடல் பருமன்


பொதுவாக டயட், உடல் எடையைக் குறைக்கிறேன் என்று சொன்னால் அது மக்கள் திரளுக்கு பெரிதாக ஈர்ப்பு ஏற்படுத்தாது. ஆனால் அதுவே சமூக வலைத்தளத்தில் இருப்பவர்களுக்கு உடல் எடை குறைப்பது என்பது ஆர்வமூட்டுவதாக உள்ளது. இப்படி செட்டு சேர்ந்து உடற்பயிற்சி செய்வது அதிகரித்து வருகிறது. இதில் நல்ல விஷயங்கள் இருப்பது போல மோசமான விஷயங்களும் உண்டு. 2007ஆம் ஆண்டு ஆய்வு அமைப்புகள் செய்த ஆய்வறிக்கையில் உடல் பருமன் பாதிப்பு சமூகவலைத்தளங்கள் மூலம் பரவியது என தெரிய வந்துள்ளது.


எம்ஐடி நிறுவனம் உடல்பருமன் கொண்ட மக்கள் சமூக வலைத்தளங்களில் உடற்பயிற்சி பற்றி கருத்துகளை பதிவிடுகிறார்களா என ஆய்வு செய்தது. உடல் பருமன் கொண்டவர்கள் தங்களைப் போன்ற பாதிப்பு கொண்டவர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சியை திட்டமிட்டனர். இவர்கள் ஒல்லியான மனிதர்களுடன் இதுபற்றி பேசவில்லை.


அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் 75 சதவீத பெண்கள், தங்களது குழுவிலுள்ள பெண்கள் குறிப்பிட்ட உணவுமுறையை பின்பற்றுவதை ஆதரிக்காமல் இருந்தனர். அதைப்பற்றி பேசாமல் இருந்தனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. விருப்பமான உணவுபண்டங்களை சாப்பிடத்தொடங்குவது விட உடற்பயிற்சி செய்வது கடினமானதாகவே இருந்து வந்துள்ளது. தினசரி உடற்பயிற்சியை விடாமல் செய்வது என்பது மன உறுதி கொண்டவர்களுக்கு மட்டுமே சாத்தியம். சில சமயங்களில் இப்பழக்கம் சலிப்பைக் கூட ஏற்படுத்தலாம்.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்