தங்கையால் நிலைகுலையும் அண்ணனின் செக்ஸ் வாழ்க்கை!

  

 

 

'Shame' and 'No Sexual Rapport' | The Tyee

 

 

ஷேம்


தனக்குள் உள்ள காமத்தை சமாளிக்க முடியாமல் அதற்கு அடிமையாகி அதன் போக்கில் செல்பவனின் வாழ்க்கையில் அவனது தங்கையால் ஏற்படும் சங்கடங்களே கதை

படம் முதிர்ச்சியானவர்களுக்கானது. படம் தொடங்குவதே படுக்கை அறையில்தான் என்பதால் படத்தின் மையப்பொருள் என்னவென்று பார்வையாளர்கள் எளிதாக தெரிந்துகொள்ள முடிகிறது. படத்தின் நாயகன் பிராண்டனுக்கு வாழ்க்கையில் முக்கியமானது காமம் மட்டுமே. அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவில் வாழ்பவனுக்கு அவனது குடும்பம் என்று சொல்லிக்கொள்ள அவனது தங்கை சிஸ்ஸி மட்டுமே இருக்கிறாள். அவள் கிளப்பில் பாட்டு பாடும் பாடகி. அவள் அவனை சந்திக்க கேட்கும் பல்வேறு செய்திகளுக்கு பிராண்டன் எந்த பதிலும் சொல்லுவதில்லை. 

Shame | Bild 13 von 23 | Film | critic.de 

தினசரி இரவு ஒரு பெண்ணுடன் கழியவேண்டும் இல்லையெனில் இணையத்தில் வெப் கேம் வழியாக விலைமாதுக்களின் வீடியோக்களை பார்க்கவேண்டும் என்பது மட்டுமே பிராண்டனின் லட்சியமாக உள்ளது. வீட்டில்தான் இப்படி என்றில்லை. அலுவலகத்தில் கூட பிராண்டன் தனது கணினியில் செக்ஸ் வீடியோக்களின் களஞ்சியமே வைத்திருக்கிறான். இது அவனது முதலாளி நண்பனுக்கே தெரியாது. 

தினசரி செக்ஸ், கர மைதுனம் என சந்தோஷமாக வாழ்பவனுக்கு ஏற்படும் பாதிப்பு அவனது தங்கை மூலமாக நடக்கிறது. அவனது தங்கை பார்டர்லைன் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் எனும் மனநிலை பாதிப்பால் பாதிக்கப்பட்டவள். இதனால் தன்னைத்தானே வருத்திக்கொள்வது, கைகளை கத்தியால் வெட்டிக்கொள்வது என வினோத மனநிலையில் இருக்கிறாள். பிராண்டன் கொடுத்த சாவி மூலம் அபார்ட்மெண்ட்டுக்குள் வருபவளை பிராண்டன் எதிர்பார்க்கவில்லை. அவளை அவன் சந்திப்பதே பாத்ரூமில்தான். யாரோ கொள்ளையன்தான் உள்ளே வந்துவிட்டான் என பிராண்டன் நினைத்து பேஸ்பால் மட்டையை எடுத்துக்கொண்டு உள்ளே வருகிறான். 

Shame (2011) - IMDb | Michael fassbender, Film inspiration ... 

 

தங்கை திடீரென தனது அறைக்கு வந்துவிட்டதால் பிராண்டனின் இயல்பான செக்ஸ் வாழ்க்கை நிலைகுலைகிறது. அவனால் எதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை. அவள் பிராண்டனின் முதலாளியோடு செக்ஸ் வைத்துக்கொள்கிறாள். ஏன் ஒரு சமயம் அவனோடும் படுக்கையில் திடீரென வந்து படுக்கிறாள். இதனால் கடுமையான மனச்சோர்வுக்கு ஆளாகும் பிராண்டன், அவளை கடுமையாக திட்டுகிறான். இதனால் அவர்களுடைய உறவில் ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பதுதான் இறுதிக்காட்சி. 

காமம் எந்தளவு வசீகரம் மிக்கது என்பதை பிராண்டன் ரயிலில் செல்லும் காட்சிகளே சொல்லும். காமம் சார்ந்து அவன் காட்டும் தீவிரத்தை ஒருவர் உணர கிளப் ஒன்றில் பெண்ணின் அந்தரங்க உறுப்பை வருடி அவளை எப்படி உறவு கொள்வேன் என்று வர்ணிக்கும் காட்சியும், ஒரினச்சேர்க்கையாளர்களின் கிளப்பில் உறவு கொள்ளும் காட்சியும் முக்கியமானது. 

வாழ்க்கையின் ஆதாரமான உணர்வு காமம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்கு அடிமையானவனின் வாழ்க்கை எப்படி மாறுகிறது, அந்த தீவிரம் எந்த நிலைக்கு ஒருவரைக் கொண்டு செல்கிறது என்பதை உணர இந்த படத்தைப் பார்க்கலாம். 

படத்தில் நடித்துள்ள முன்னணி நடிகர்கள் அனைவருமே உணர்ச்சிப்பூர்வமாக சிறப்பாக நடித்துள்ளனர். மையப்பொருள் கொஞ்சம் சர்ச்சைக்குரியது என்பதால் உடனே மனதிற்குள் விவாதம் நடத்தாமல் படத்தைப் பாருங்கள். 

வேட்டை


கோமாளிமேடை டீம்






 


கருத்துகள்